வீட்டிற்க்கு வருபவர்களுக்கு முதலில் ஏன் தண்ணீர் கொடுக்க வேண்டும் தெரியுமா? உண்மை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..
பொதுவாகவே நமது மன்னோர் எதை செய்தாலும் காரணம் இல்லாமல் செய்ய மாட்டார்கள். அவர்கள் கடைப்பிடிக்கும் ஒவ்வொரு நடைமுறைக்கு பின் இருக்கும் காரணம் நம்ம வியக்க வைக்கும். அந்த வகையில், பாரம்பரியமாக தமிழர்கள் பின்பற்றிய ஒரு விஷயம் என்றால் அது வீட்டிற்க்கு வருபவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது தான். வீட்டிற்கு வருபவர்களுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு தான் மற்ற விஷயங்களை பேச தொடங்குவார்கள். இந்த பழக்கம் இன்றும் பலரால் பின் பற்றப்படுகிறது. இப்படி வீட்டிற்க்கு வருபவர்களுக்கு முதலில் ஏன் தண்ணீர் குடிக்க கொடுக்கிறார்கள் தெரியுமா?
பொதுவாகவே, தண்ணீருக்கு மனிதர்களின் மனநிலையை மாற்றும் சக்தி உண்டு. ஆம், ஒரு மனிதனின் கோபதாபத்தையும், வெறுப்பையும் மாற்றும் ஆற்றல் வேறு எதிலும் இல்லாமல் தண்ணீரில் தான் உள்ளது. இதனால் தான் சண்டையை தீர்த்து வைக்க போகும் போது, 'முதல்ல தண்ணி குடிப்பா' அப்புறமா பேசிக்கலாம் என்று கூறுவார்கள். சண்டையிடும் நபர் தண்ணீர் குடித்ததும் தனது பேச்சில் ஒருவித சாந்தமும் அமைதியும் தெரியும். இதன் காரணமாக தான் வீட்டிற்கு வருபவர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் பழக்கத்தை நமது முன்னோர்கள் உருவாக்கினர். நமது வீட்டுக்கு வருபவரின் மனநிலை எதுவாக இருந்தாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் நமது வீட்டை பாதிக்க கூடாது என்று தான் நமது முன்னோர் இந்த பழக்கத்தை பின்பற்றினர்.
Read more: இவர்கள் எல்லாம் காதுகளை சுத்தம் செய்யவே வேண்டாம்.. மருத்துவர் அளித்த தகவல்..