எப்பவும் மூட்டு வலி, இடுப்பு வலி, கை கால் வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்போ தினமும் இந்த பாலை குடிங்க.. திரும்ப வலியே வராது..
இன்று உள்ள காலகட்டத்தில் இளம்வயதிலேயே இடுப்பு வலி, மூட்டு வலி, கை கால் வலி என்று புலம்புகின்றனர். இதற்க்கு முக்கிய காரணம் கால்சியம் சத்து குறைபாடு தான். உடலில் போதிய அளவு கால்சியம் சத்து இல்லாவிட்டால், இது போல் பல வலிகள் உடலில் ஏற்படும். இதற்க்கு முடிந்த வரை நாம் உணவை பக்குவமாய் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில், உலர் விதைகளின் ராஜாவாக திகழும் பாதாம் பருப்பு பெரிதும் உதவும். பல மருத்துவ பயன்களை கொண்ட பாதாமில், ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. பாதாம் பருப்பில் தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் இருப்பதால், இது உடலின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
கால்சியம் சத்து குறைபாட்டால் அவதிப்படுவர்கள், பாதாம் பருப்பை பாலில் சேர்த்து சாப்பிட வேண்டும். பாதாம் விலை அதிகம் என்று நீங்கள் நினைக்கலாம். உடலில் உள்ள அத்தனை வலிகளுக்கும், மருத்துவமனைக்கு செலவு செய்வதை விட பாதாமின் விலை சற்று குறைவு தான். ஏனென்றால், கால்சியம் சத்துக்குறைபாட்டை போக்க பாதாம் பெரிதும் உதவும். பாதாமில், புரதம், மெக்னீசியம், கார்பஸ், நல்ல கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின் ஈ, கலோரி, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளது. அதே சமயம், பாலில் கால்சியம், புரதம், வைட்டமின் பி, பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகளவு உள்ளது.
இதனால் நீங்கள், பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து தோலை நீக்கி, பின்னர் அதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட்டாக அரைக்க வேண்டும். மேலும், ஒரு ஏலக்காயை மிக்ஸியில் போட்டு, அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பவுடர் பதத்திற்கு பொடித்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு கிளாஸ் பசும் பால் சூடுபடுத்தி, அதில் அரைத்த பாதாம் பேஸ்டை போட்டு கலந்துவிடுங்கள். பின்னர் பொடித்து வைத்துள்ள ஏலக்காய் தூளை சேர்த்து பாலை காய்ச்சினால் போதும். இதில் உங்கள் தேவைக்கு ஏற்ப தேன் சேர்க்கலாம். இந்த பாலை தொடர்ந்து பருகி வந்தால் உடலில் கால்சியம் சத்து குறைபாட்டால் ஏற்படும் எந்த வலியும் வராது.
Read more: வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் படியுங்கள்..