பெற்றோர்களே.! குழந்தைகளுக்கு தற்கொலை எண்ணம், கோபம் வர முக்கிய காரணம் என்ன தெரியுமா.?
நவீன காலகட்டத்தில் பலருக்கும் நேரமின்மை என்பது மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. தற்போது பலரது வீட்டிலும் தாய், தந்தை இருவரும் வேலைக்கு செல்லும் சூழ்நிலையில் குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகவும் கடினமான செயலாக மாறிவிட்டது.
இது போன்ற நிலைகளில் குழந்தைகளுக்கு போன் கொடுத்து பழக்கப்படுத்துவது பலரது வீடுகளிலும் சாதாரணமாக நடந்து வருகிறது. ஆனால் குழந்தைகள் சிறு வயதில் இருந்து போன் பார்ப்பதினால் ஏற்படும் பாதிப்புகளை மருத்துவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
குழந்தைகள் சிறு வயதில் இருந்து போன் பார்ப்பதினால் நினைவாற்றல் சீக்கிரம் பாதிக்கப்படும். சிறுவயதிலேயே போனிற்கு அடிமையாகும் பாதிப்பு ஏற்படும். இதை நிறுத்த முயற்சி செய்யும்பொழுது குழந்தைகளுக்கு கோவம், அடம்பிடித்தல், பிடிவாதம் போன்ற குணங்கள் அதிகமாக வெளிப்படும்.
மேலும் டீன் ஏஜ் பருவத்தில் தற்கொலை எண்ணம் வருவதற்கு முக்கிய காரணம் போன் பயன்படுத்துவது தான் என்று ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. எனவே குழந்தைகளுக்கு ஃபோன் கொடுப்பதையும், அவர்களின் முன்பு நாம் அடிக்கடி போனில் நேரத்தை செலவிடுவதையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.