ரியல் ஹீரோ..!! 13-வது மாடியிலிருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை..!! பதறியடுத்து ஓடிச்சென்று காப்பாற்றிய நபர்..!! வைரலாகும் வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் டும்புவாலி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு 13-வது மாடியில் வசித்து வரும் தம்பதிக்கு 2 வயதான குழந்தை உள்ளது. இந்த குழந்தை கடந்த வாரம் 13-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளது. அப்போது, அங்கு பவேஷ் ஹெத்ரா என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். குழந்தை கீழே விழுவதை கண்டதும் ஓடிச்சென்று, குழந்தையை காப்பாற்றினார். இந்த சம்பவத்தில் அந்த குழந்தைக்கு சிறிய காயங்கள் மட்டு்மே ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் அந்த நபரை நிஜ வாழ்க்கை ஹீரோ என்று பாராட்டி வருகின்றனர்.
குழந்தை விழுந்தது எப்படி..?
அடுக்குமாடு குடியிருப்பின் 13-வது மாடியில் இரண்டு வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமான பால்கனியின் ஓரத்தில் சிறிது நேரம் ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருந்துள்ளது. பின்னர், திடீரென கை நழுவி கீழே விழுந்ததாக நேரில் கண்டவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோவில், நீல நிற சட்டையில் இருந்த மாத்ரே என்பவர், கட்டிடத்தில் இருந்து விலகி நடந்து செல்வதைக் காணலாம். அப்போது எதிர்பாராத விதமாக மேலே பார்த்தபோது குழந்தை 13-வது மாடியின் பால்கனியில் இருந்து விழப்போகிறது என்பதை உணர்ந்தார். குழந்தையைப் பிடிக்க முயற்சிக்கும் முயற்சியில் அவர் அந்த இடத்தை நோக்கி விரைகிறார். சரியான நேரத்தில் அவர் குழந்தையை பிடித்ததால், குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. பாவேஷ் மாத்ரே குழந்தையை முழுமையாகப் பிடிக்க முடியவில்லை என்றாலும், அவர் கீழே விழுந்ததை தடுத்ததால், சிறிய காயங்கள் மட்டுமே குழந்தைக்கு ஏற்பட்டன.
இதையடுத்து, உடனே அந்த குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில், அந்த நபரை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் உயரமான கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.