அதிரடியாக உயருகிறது பிஎஃப் தொகை..!! பிப்ரவரி முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்..!! ஊழியர்கள் மகிழ்ச்சி..!!
பிஃஎப் பணம் என்பது ஒவ்வொருவர் வேலை செய்யும் இடங்களிலும் சேமிக்கப்படுகிறது. அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் நலனுக்காகவும், பாதுகாப்பாகவும் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. மாதந்தோறும் ஊழியர்கள் பெறும் சம்பள தொகையில் இருந்து டெபாசிட் செய்யப்படுகிறது. அத்துடன் ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்தும் ஒரு தொகை முதலீடு செய்யப்படும். ஒவ்வொரு ஊழியர்களும் தங்களது ஓய்வுக்கு பின், இந்த தொகையை எடுத்து எதிர்கால தேவைக்காக பயன்படுத்தி கொள்ளலாம்.
இதற்கிடையே, பிஎஃப் பணத்திற்கு விண்ணப்பித்த பிறகு பணத்தை பெற சில நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ள நிலையில், தற்போது அதனை எளிதாக்கும் வகையில் புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டது. இது அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் சார்பில் புதிய ஏடிஎம் கார்டுகளை தயாரிக்கும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, இனி பிஎஃப் பணத்தையும் ஏடிஎம் மூலமே எடுத்துக் கொள்ளலாம். இந்த புதிய நடைமுறைதான் விரைவில் அமலுக்கு வர உள்ளது.
24 சதவீதம் வரை பணம் பிடித்தம்
தற்போது வரை ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து ரூ.15,000 வரை மட்டுமே பிஎஃப் பணம் பிடித்தம் செய்யப்படும் நிலையில், புதிய விதிகளின்படி இனி 24% வரை பணம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதாவது, ரூ.1 லட்சம் சம்பளம் பெறுகிறீர்கள் என்றால், அதிலிருந்து ரூ.24,000 வரை பிஎஃப் பிடித்தம் செய்யப்படும். இந்த புதிய விதிகள் மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு அதாவது, பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளது.