For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்..!! திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை அதிமுக போராட்டம்..!!

A protest will be held on behalf of the AIADMK tomorrow (December 27th) at 10.30 am on Friday, condemning the DMK Stalin-model regime for failing to maintain law and order.
04:32 PM Dec 26, 2024 IST | Chella
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்     திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை அதிமுக போராட்டம்
Advertisement

திமுக ஆட்சியைக் கண்டித்து அதிமுக சார்பில் நாளை போராட்டம் நடைபெறவுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக அரசு பதவியேற்ற நாள் முதலே, தமிழ்நாட்டில் பெண்கள், சிறுமிகள், வயதானோர் உள்ளிட்ட பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு சட்டம்-ஒழுங்கு அடியோடு குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது.

சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழ்நிலை திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை ஊடகங்கள் தினசரி நிகழ்வுகளாகச் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் முக.ஸ்டாலின், பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சட்டப்படி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காவல்துறைக்கு முழு சுதந்திரத்தை இன்று வரை வழங்கவில்லை. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியாளர்களால் மக்கள் படும் வேதனைக்கு அளவே இல்லை. இத்தகைய கொடுங்கோல் ஆட்சி நடத்தும் ஸ்டாலினின் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிலையில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்த தவறிய, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்து, அதிமுக சார்பில் நாளை (டிசம்பர் 27ஆம் தேதி) வெள்ளிக் கிழமை காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும், மக்கள் அதிகம் கூடும் கழக அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : குகேஷை நேரில் அழைத்து வாழ்த்திய சூப்பர் ஸ்டார்..!! கேக் வெட்டி பரிசளித்த சிவகார்த்திகேயன்..!!

Tags :
Advertisement