For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததால் வந்த வினை..!! காவல்துறையின் வலையில் சிக்கியது எத்தனை பேர்..?

08:55 AM Nov 13, 2023 IST | 1newsnationuser6
விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததால் வந்த வினை     காவல்துறையின் வலையில் சிக்கியது எத்தனை பேர்
Advertisement

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுவை குறைப்பதற்காக தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. அரசின் இந்த அறிவுறுத்தலை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக கூறி 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இதில் அதிக அளவில் சத்தத்தை ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்ததாக கூறி 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேபோல் மதுரையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக கூறி 141 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் கோவையில் 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சென்னையில் நேற்று இரவு வரை 100 டன் அளவில் பட்டாசு கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று இரவுக்குள் பட்டாசு கழிவுகள் முழுமையாக அகற்றப்படும் என்றும் மொத்தம் 200 டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement