For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BoB மொபைல் செயலி மீதான தடையை நீக்கியது ரிசர்வ் வங்கி.. வாடிக்கையாளர்கள் குஷி..!

03:47 PM May 09, 2024 IST | Mari Thangam
bob மொபைல் செயலி மீதான தடையை நீக்கியது ரிசர்வ் வங்கி   வாடிக்கையாளர்கள் குஷி
Advertisement

வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பிரத்யேக செயலிகளை அறிமுகம் செய்வது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக 'BoB வேர்ல்ட்' என்ற செயலியை பேங்க் ஆஃப் பரோடா அறிமுகம் செய்தது.

Advertisement

மேலும் அந்த மொபைல் ஆப்-இல், பேங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்கள் அனைவரையும் இணைக்க வேண்டும் என்று வங்கி தரப்பில், அங்கு பணி புரியும் ஊழியர்கள் மற்றும் ஏஜென்ட்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இந்த ஆப்-இல் பல வாடிக்கையாளர்களும் இணைந்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டதில் நிறைய குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்பட்டது. அதிக அளவிலான தொகை திருடப்பட்டு ஊழல் நடந்ததாகவும் சில நாட்களுக்கு முன்பு அல் ஜசீரா ஊடகம் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

அக்டோபர் 10, 2023 அன்று அரசுக்குச் சொந்தமான பாங்க் ஆஃப் பரோடா (BoB) மொபைல் செயலியான 'பாப் வேர்ல்ட்' மூலம் புதிய வாடிக்கையாளர்களை உள்வாங்கக் கூடாது என ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்தது. இந்நிலையில், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா பேங்க் ஆஃப் பரோடா செயலியான BoB வேர்ல்ட் மீதான கட்டுப்பாட்டை நீக்கி உள்ளது. குறைபாடுகளை சரி செய்ததன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் போது KFS ஆவணங்கள் முக்கியம் என்கிறது ஆர்பிஐ. ஆனால், அத்தகைய ஆவணங்களை சரிவர பராமரிக்காமல் கடன் வழங்கியதாகக் குற்றம் சாட்டி பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு, இன்ஸ்டா EMI கார்டு மற்றும் அதன் இ-காமர்ஸ் தளமான eCOM மூலம் கடன்களை வழங்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. தற்போது பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் இந்த செயல்முறைகளை மாற்றி அமைத்ததன் காரணமாக ஆர்பிஐ கட்டுப்பாட்டை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement