For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'Paytm' வங்கிக்கு 15 நாள் அவகாசம்..!! டெபாசிட் தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!

07:16 PM Feb 16, 2024 IST | 1newsnationuser7
 paytm  வங்கிக்கு 15 நாள் அவகாசம்     டெபாசிட் தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Advertisement

வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்படுவதை பிப்ரவரி 29ஆம் தேதியோடு நிறுத்த வேண்டும் என பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் வாடிக்கையாளர் கணக்குகளில் டெபாசிட்கள், கிரெடிட் பரிவர்த்தனைகள் மற்றும் டாப்-அப்களை நிறுத்துவதற்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கியிருக்கிறது. வாடிக்கையாளரின் கணக்குகளில் டெபாசிட் தொகை நிறுத்தப்படுவதற்கான தேதியை பிப்ரவரி 29, 2024 முதல் மார்ச் 15 வரை நீட்டித்துள்ளது.

Advertisement

மேலும் பேடிஎம் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் உள்ள வைப்புத் தொகையை எந்தவித தடையும் இன்றி திரும்பப் பெறுவதற்கு ஆவணம் செய்யுமாறு ரிசர்வ் பேங்க் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் லிமிடெட் வாடிக்கையாளர்கள் மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு சிறிது காலம் தேவைப்படலாம் என்ற பொது நலன் அடிப்படையில் பேடிஎம் வங்கிக்கு கொடுக்கப்பட்ட அவகாசத்தை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்திருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும் வாடிக்கையாளர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் தானியங்கி 'ஸ்வீப்-இன் ஸ்வீப்-அவுட்' வசதியின் மூலம் வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகையை திரும்ப பெறுவதற்கு பேடிஎம் வங்கி வழிவகை செய்ய வேண்டும் என ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் வழிமுறைகளை பேடிஎம் வங்கி தொடர்ந்து பின்பற்றாமல் மறுத்து வந்த காரணத்தால் டெபாசிட்கள், கிரெடிட்கள் அல்லது வாடிக்கையாளர் கணக்குகளில் டாப்-அப் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவதை பிப்ரவரி 29ஆம் தேதி முதல் தடை செய்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது . மேலும் நிதி பரிமாற்றங்கள் மற்றும் யுபிஐ வசதிகளும் தடை செய்யப்பட்டிருந்தது.

பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு மற்றொரு பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. வருங்கால வைப்பு நிதி அமைப்பு பேடிஎம் வங்கிகளுடன் இணைக்கப்பட்ட பண பரிவர்த்தனைகளை கையாளும் போது எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அதன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

சமீப காலமாக தொடர் தடைகளை சந்தித்து வரும் பேடிஎம் வங்கிக்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு அந்த வங்கியின் நற்பெயரில் களங்கம் ஏற்படுத்தும் நிகழ்வாக இது அமைந்துள்ளது. பிப்ரவரிக்குப் பிறகு வாடிக்கையாளர் கணக்குகள், வாலட்கள், ஃபாஸ்டேக்குகள் மற்றும் பிற கருவிகளில் டெபாசிட் அல்லது டாப்-அப்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறு பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ஜனவரி 31 அன்று ரிசர்வ் பேங்க் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பேடிஎம் வங்கியுடன் தொடர்புடைய பணப்பரிவர்த்தனைகளை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தி இருப்பது பேடிஎம் வங்கியில் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

Tags :
Advertisement