"அடேங்கப்பா..."! டிசம்பர் மாதம் வங்கிகளுக்கு இத்தனை நாள் விடுமுறையா.? முன்னரே உங்கள் வேலையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.!
இந்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி நாடு முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் நடைபெறும் உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் இயங்கி வரும் தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகளுக்கு 18 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்தியாவில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதனால் ஒவ்வொரு மாத தொடக்கத்திற்கு முன்பும் அந்தந்த மாதங்களில் இருக்கும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது பண தேவைகளையும் வங்கி சார்ந்த பணிகளையும் முன்கூட்டியே திட்டமிடுவதன் பொருட்டு இந்த அறிவிப்பு ரிசர்வ் வங்கி ஆல் வெளியிடப்படுகிறது .
தற்போது டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது. அதன்படி இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் வங்கிகளுக்கு 18 நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இருக்கும் லோக்கல் ஹாலிடே அடிப்படையில் ரிசர்வ் வங்கி இந்த விடுமுறை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் மாதத்தில் எந்தெந்த மாநில வங்கிகளுக்கு எப்போது விடுமுறை என்ற பட்டியலை பார்ப்போம்.
டிசம்பர் ஒன்றாம் தேதி மாநில தொடக்க நாள் மற்றும் சுதேசி நாளை முன்னிட்டு அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகலாந்து மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது . டிசம்பர் நான்காம் தேதி புனித பிரான்சிஸ் சேவியர் விழாவை முன்னிட்டு கோவா மற்றும் திரிபுரா மாநில வங்கிகளுக்கு விடுமுறை. டிசம்பர் 12ஆம் தேதி மேகாலயா மாநில உள்ளூர் விடுமுறையை முன்னிட்டு அந்த மாநிலத்தில் இருக்கும் வங்கிகள் செயல்படாது. டிசம்பர் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் விக்கி மாநில உள்ளூர் விடுமுறை என்பதால் அந்த மாநிலத்தின் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. டிசம்பர் 18ஆம் தேதி மேகாலயா மாநிலத்திலும் டிசம்பர் 19ஆம் தேதி கோவா மாநிலத்திலும் உள்ளூர் விடுமுறை என்பதால் அங்கு இருக்கும் வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுபோக கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் மேலும் வார இறுதி நாட்கள் விடுமுறை இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை என மொத்தம் 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி நாடு முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் நடைபெறும் உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் இயங்கி வரும் தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகளுக்கு 18 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்தியாவில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதனால் ஒவ்வொரு மாத தொடக்கத்திற்கு முன்பும் அந்தந்த மாதங்களில் இருக்கும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது பண தேவைகளையும் வங்கி சார்ந்த பணிகளையும் முன்கூட்டியே திட்டமிடுவதன் பொருட்டு இந்த அறிவிப்பு ரிசர்வ் வங்கி ஆல் வெளியிடப்படுகிறது.
தற்போது டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது. அதன்படி இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் வங்கிகளுக்கு 18 நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இருக்கும் லோக்கல் ஹாலிடே அடிப்படையில் ரிசர்வ் வங்கி இந்த விடுமுறை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் மாதத்தில் எந்தெந்த மாநில வங்கிகளுக்கு எப்போது விடுமுறை என்ற பட்டியலை பார்ப்போம்.
டிசம்பர் ஒன்றாம் தேதி மாநில தொடக்க நாள் மற்றும் சுதேசி நாளை முன்னிட்டு அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகலாந்து மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. டிசம்பர் நான்காம் தேதி புனித பிரான்சிஸ் சேவியர் விழாவை முன்னிட்டு கோவா மற்றும் திரிபுரா மாநில வங்கிகளுக்கு விடுமுறை. டிசம்பர் 12ஆம் தேதி மேகாலயா மாநில உள்ளூர் விடுமுறையை முன்னிட்டு அந்த மாநிலத்தில் இருக்கும் வங்கிகள் செயல்படாது. டிசம்பர் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் விக்கி மாநில உள்ளூர் விடுமுறை என்பதால் அந்த மாநிலத்தின் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. டிசம்பர் 18ஆம் தேதி மேகாலயா மாநிலத்திலும் டிசம்பர் 19ஆம் தேதி கோவா மாநிலத்திலும் உள்ளூர் விடுமுறை என்பதால் அங்கு இருக்கும் வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுபோக கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் மேலும் வார இறுதி நாட்கள் விடுமுறை இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை என மொத்தம் 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.