முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்.. குரூப் 'A' அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய டெல்லி எல்ஜி ஒப்புதல்..!!

Rau IAS Coaching case: Delhi LG approves immediate suspension of two group 'A' officers
06:34 PM Dec 23, 2024 IST | Mari Thangam
Advertisement

டெல்லியில் பெய்த மழையால், பழைய ராஜேந்திரா நகரில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளம் வெள்ளத்தில் மூழ்கியது. இதில் தண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புப்படையினர், 14 மாணவர்களை பத்திரமாகவும், 3 மாணவர்களை சடலமாகவும் மீட்டனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்த விவகாரம் தொடர்பாக உண்மைகளை மறைத்ததற்காக பிரிவு அதிகாரி வேத் பால் மற்றும் உதவி பிரிவு அதிகாரி உதய் வீர் சிங் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க எல்ஜி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட மாஜிஸ்திரேட் (மத்திய) நடத்திய விரிவான விசாரணையின்படி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட இரண்டு அதிகாரிகளும் தீ பாதுகாப்புச் சான்றிதழ் வழங்குவதற்காக வளாகத்தை ஆய்வு செய்தனர். இருப்பினும், அவர்கள் அடித்தளத்தை நூலகமாக தவறாகப் பயன்படுத்துவது பற்றிய தகவலை மறைத்து, டெல்லி மாநகராட்சிக்கு (எம்சிடி) தவறை தெரிவிக்கவில்லை.

ஐஏஎஸ் ஆர்வலர்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஸ்ரேயா யாதவ், தெலுங்கானாவைச் சேர்ந்த தன்யா சோனி மற்றும் கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த நவீன் டால்வின் ஆகியோர் அடித்தளத்தில் இயங்கும் நூலகத்திற்குள் சிக்கி இறந்தனர். பயிற்சி மையத்தில் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தது கவலையடையச் செய்ததுடன், 10க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் விதிகளை மீறியதாகக் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read more ; உல்லாசத்துக்கும், பணத்துக்கும் தான் காதல்; பல பெண்களை காதலித்து, வாலிபர் செய்த மோசடி!!!

Tags :
Delhi LGgroup 'A' officersRau IAS Coaching case
Advertisement
Next Article