லக்னோ வங்கி கொள்ளை!. போலீஸ் என்கவுண்டரில் 2பேர் பலி!. 4 பேர் கைது; பணம், நகைகள் மீட்பு!.
Encounter: லக்னோவில் வங்கிக் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் நேற்றுஇரவு போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐஓபி) 42 லாக்கர்களை உடைத்து கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை திருடிய கும்பலைச் சேர்ந்த இருவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். லக்னோவில் உள்ள சின்ஹாட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிசான் பாதையில் காவல்துறையினர், குற்றவாளிகளை நோக்கி என்கவுண்டர் நடத்தினர்.
அப்போது, என்கவுண்டரில் படுகாயமடைந்தவர் சோபிந்த் குமார் (29) என்பது அடையாளம் காணப்பட்டது, இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். தப்பியோடிய மேலும் ஒரு குற்றவாளி சன்னி தயாள் காஜிபூரில் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டார். கடந்த 24 மணி நேரத்தில் வங்கிக் கொள்ளைக் கும்பலுடன் லக்னோ காவல்துறை நடத்திய இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
Readmore: மீண்டும் துயரம்!. 700 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை!. மீட்புப் பணிகள் தீவிரம்!.