Ration | தமிழக ரேஷன் கடைகளில் UPI பரிவர்த்தனை இருக்கா..? இல்லையா..? குழப்பத்தில் பொதுமக்கள்..!!
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் யுபிஐ பேமெண்ட் குறித்தான குழப்பங்கள் நிலவி வருகிறது. இது தொடர்பான அரசின் சமீபத்திய தகவல்களை இப்பதிவு மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் வியாபார நிமித்தங்களுக்காக யுபிஐ பேமெண்ட் வழிமுறையை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதே போல், தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளிலும் UPI பேமெண்ட் செயல்பாடு கடந்த ஜனவரி முதல் செயல்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில், சில வாரங்களாக திடீரென்று ரேஷன் கடை ஊழியர்கள் யுபிஐ பரிவர்த்தனை செயல்பாடு இல்லை என்றும், உரிய பணத்தை கொடுத்து பொருளை வாங்கிச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
யுபிஐ செயல்பாட்டுக்கு தேவை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், UPI மூலம் பணம் செலுத்துவதால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், சில்லறை தட்டுப்பாடுகள் ஏற்படாது என்றும் பொதுமக்கள் சார்பிலும் ரேஷன் கடை ஊழியர்கள் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே, இது குறித்து கூட்டுறவுத்துறை பரிசீலனை செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : ’திமுக கூட்டணியில் ஏன் இணைந்தேன்’..? ’ஒரு சீட் கூட கேட்காதது ஏன்’..? கமல்ஹாசன் பரபரப்பு விளக்கம்..!!