பெற்றோர்களே எச்சரிக்கை.. பூரி தொண்டையில் சிக்கி 6 ஆம் வகுப்பு சிறுவன் பலி..!
6ம் வகுப்பு மாணவன் ஒரே நேரத்தில் மூன்று பூரிகளைச் சாப்பிட முயன்ற நிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் மதியம் வழக்கம் போல வீட்டில் இருந்து எடுத்து வந்த உணவைச் சாப்பிட்டுள்ளார். அப்போது ஒரே நேரத்தில் அந்த மாணவன் மூன்று பூரிகளைச் சாப்பிட முயன்ளான். அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அந்த பூரி மூச்சு குழாயை அடைத்துவிடவே மூச்சு விட முடியாமல் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகையில், "சிறுவன் மதிய உணவுக்கு வீட்டில் இருந்து பூரிகளை கொண்டு வந்துள்ளான். ஒரே நேரத்தில் மூன்று பூரிகளைச் சாப்பிட முயன்ற போது திடீரென மூச்சு திணறி இருக்கிறது. அதைக் கவனித்த பள்ளியில் வேலை செய்து வந்த ஊழியர்கள் உடனடியாக அவனை அருகே உள்ள கிளின்க்கிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துப் போகச் சொல்லி இருக்கிறார்கள்.
இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாப்பிடும் போது பேசவே சிரிக்கவே வேண்டாம். ஒழுங்காக மென்று சாப்பிடுங்கள். மெல்லாமல் சாப்பிடும் போது தான் அது உங்கள் தொண்டையில் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
Read more : 2036 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி…! மத்திய அரசு ஆலோசனை…!