ரேஷன் கார்டில் பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்யணுமா.? இந்த தேதியில் மிஸ் பண்ணிடாதீங்க.!
ரேஷன் கார்டு நமது நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கியமான ஆவணமாக இருந்து வருகிறது. இந்த அட்டைகளை பயன்படுத்தி அரசு ரேஷன் கடைகளில் பொருட்களை மலிவு விலையில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இது வங்கிக் கடன் மற்றும் அரசு சார்ந்த வேலைகளுக்கு முக்கிய ஆவணமாகவும் கருதப்படுகிறது.
இந்த ரேஷன் கார்டில் ஒவ்வொரு வருடமும் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் புதிய ஆட்கள் சேர்ப்பு செல்போன் எண்களை மாற்றுதல் போன்றவற்றிற்காக முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வருடத்திற்கான குறை தீர்ப்பு முகாம் வருகின்ற ஒன்பதாம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் ரேஷன் கார்டுகளில் திருத்தங்கள் செய்து கொள்ளுமாறு அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த குறை தீர்க்கும் முகாம்களின் மூலம் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்கம் முகவரி மாற்றம் மற்றும் செல்போன் எண்களின் மாற்றம் ஆகிய வசதிகளையும் செய்து கொள்ளலாம். மேலும் ரேஷன் கடைக்கு நேரில் வந்து பொருள் வாங்க முடியாத முதியவர்களுக்கு அங்கீகாரச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்த அங்கீகாரச் சான்றிதழை பயன்படுத்தி அவர்கள் வேறொரு நபர் மூலமாக தங்களது ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.