ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!! அனைத்து விவரங்களும் இனி உங்கள் கையில்..!! உடனே இந்த வேலையை முடிங்க..!!
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் TNePDS என்ற அலைபேசி செயலி மூலம் புகார் பதிவு செய்தல், பரிவர்த்தனைகள், ஒதுக்கீடு, குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள், ரேஷன் கடைகளின் வேலை நேரம், ரேஷன் பொருட்கள் இருப்பு விவரம் மற்றும் குடும்ப அட்டைதாரர்களின் பின்னூட்டம் (Feedback) ஆகிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஏற்கனவே, தமிழ்நாடு அரசு பேருந்துகளில் சில்லறை வாங்குவது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிக்கப்பட உள்ளது. அதிக அளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள மக்கள் ஊக்குவிக்கப்பட உள்ளனர். அதேபோல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை வாங்க நடத்துனரும் ஊக்குவிக்கப்பட உள்ளனர்.
அதன் பொருட்டு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் அதிக டிக்கெட் விற்பனை செய்யும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நடத்துநர்களுக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் Credit Card, Debit Card, QR Code மூலமாக டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமான மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் நடத்துநர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
ஒரே டிக்கெட் : விரைவில் மெட்ரோ வழங்க உள்ள ஸ்மார்ட் கார்டுகளை இப்படிப்பட்ட பேருந்துகளிலும் பயன்படுத்தும் வசதி விரைவில் வர உள்ளது. சென்னையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட 3 ஆப்ஷன்கள் மக்களுக்கு உள்ளன. ஆனால், இது மூன்றிற்கும் மக்கள் தனி தனியாக டிக்கெட் எடுத்து வருகிறார்கள். ஆனால், இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதாவது ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி இந்த மூன்றிலும் பயணிக்க முடியும்.
Read More : டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டதா..? ஆன்லைனில் மீண்டும் பெறுவது எப்படி..? வாகன ஓட்டிகளே தெரிஞ்சிக்கோங்க..!!