For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Ration App: ரேஷன் அட்டைத்தாரர்களே!… வந்தாச்சு புதிய செயலி, புகார் எண்கள்!… தமிழக அரசு அதிரடி!

05:25 AM Mar 13, 2024 IST | 1newsnationuser3
ration app  ரேஷன் அட்டைத்தாரர்களே … வந்தாச்சு புதிய செயலி  புகார் எண்கள் … தமிழக அரசு அதிரடி
Advertisement

Ration App: ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க டிஎன்இபிடிஎஸ் என்ற செயலி மற்றும் புகார் எண்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement

ரேஷன் கடைகளில் நடக்கும் பிரச்சனைகளை சரி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் ரேஷன் அரிசி கடத்தல்கள் ஓரளவு குறைந்துள்ளதே தவிர, முழுமையாக தடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களுக்கு முறையாக ரேஷன் அரிசி போய் சேருவதில்லை என புகார் எழுந்த வண்ணம் உள்ளது. மேலும், மாத கடைசியில் மக்கள் வாங்காத பொருட்களையும் ரேஎஷன் கடை ஊழியர்கள், வாங்கியதாக பதிவு செய்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதனை தடுக்கும் விதமாக, இனி பொதுமக்கள் இது தொடர்பாக நேரடியாக புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கல் தொடர்பாக நீங்கள் கேள்வி பட்டால் உடனடியாக 1800 599 5950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், பொதுமக்கள் வெயிலில் அலைகழிக்கப்பட கூடாது என்பதற்காக ஒரே தவணையில் மொத்தமாக மக்களுக்கு பொருட்களை வழங்க வேண்டும் என 4 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது புகார் எண் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைகேடுகளை தடுப்பதற்காக டிஎன்இபிடிஎஸ் என்ற செயலியையும் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரேஷன் கடையில் ஊழியர்கள் பொருட்கள் இல்லை என்று கூறினால், சரிபார்த்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: “திமுக-விலிருந்து மோடி குடும்பம் வரை”… நடிகர் SARATH KUMAR-ன் அரசியல் பாதை.!

Tags :
Advertisement