ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் இந்த வேலையை முடிச்சிட்டீங்களா..? ஜூன் 30 தான் கடைசி..!! இனி பொருட்கள் கிடைக்காது..!!
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் உணவு வழங்கல் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசின் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. ஆனால், இப்போது உணவு வழங்கல் துறை அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் e-KYC சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கான கடைசி தேதி 2024 ஜூன் 30 என தெரிவித்துள்ளது. இந்த தேதிக்குள் யாராவது eKYC சரிபார்ப்பை முடிக்கவில்லை என்றால் ரேஷன் கார்டு மூலம் வழங்கப்படும் இலவச ரேஷன் திட்டத்தின் பலன்களை அவர்களால் பெற முடியாது.
ரேஷன் கார்டில் e-KYC செய்ய உங்கள் அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் செல்ல வேண்டும். பிறகு அங்குள்ள ரேஷன் டீலரை சந்தித்து, கடையில் இருக்கும் பிஓஎஸ் மெஷினில் உங்கள் கைரேகையை பதிவைக் கொடுக்க வேண்டும். பிறகு உங்கள் e-KYC செயல்முறை நிறைவடையும். குடும்பத் தலைவரின் கைரேகை மட்டுமின்றி, ரேஷன் கார்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்கள் கைரேகைப் பதிவை வழங்க வேண்டும்.
ஜூன் 30ஆம் தேதிக்குள் இந்த அப்டேட்டை முடிப்பது நல்லது. உங்கள் ரேஷன் கார்டு மூலம் கிடைக்கும் பலன்களைப் பெற ஜூன் 30ஆம் தேதிக்குள் ரேஷன் கடைக்குச் சென்று உங்களுடைய கைரேகைப் பதிவை வழங்கி கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும். இல்லையென்றால், ரேஷன் பொருட்கள் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
Read More : ஆப்பு வைக்க புறப்பட்டார் ஆளுநர்..? டெல்லியை உற்று கவனிக்கும் திமுக..!! தமிழக அரசியலில் பரபரப்பு..!!