For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குட் நியூஸ்..! புதிய சிலிண்டர் இணைப்பு பெற ரேஷன் அட்டை, முகவரி கட்டாயம் கிடையாது...! முழு விவரம்...

Ration card, address is not mandatory to get new cylinder connection.
07:16 AM Aug 09, 2024 IST | Vignesh
குட் நியூஸ்    புதிய சிலிண்டர் இணைப்பு பெற ரேஷன் அட்டை  முகவரி கட்டாயம் கிடையாது     முழு விவரம்
Advertisement

புலம்பெயர்ந்த குடும்பங்கள் முகவரி சான்று, குடும்ப அட்டைக்கு பதிலாக சுய அறிவிப்பு மூலம் புதிய சமையல் சிலிண்டர் இணைப்பை பெறலாம்.

Advertisement

பிரதமரின் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 01.07.2024 நிலவரப்படி, 10.33 கோடி இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளன என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர்; நாட்டில் சமையல் எரிவாயு இணைப்பை அதிகரிக்க, அதற்கான பிரச்சாரங்களை ஏற்பாடு செய்தல், பதிவு செய்து இணைப்புகளை வழங்க திருவிழாக்கள் / முகாம்கள் ஏற்பாடு செய்தல், விளம்பரப் பலகைகள், ரேடியோ ஜிங்கிள்ஸ், தகவல், கல்வி மற்றும் தொடர்பு வேன்கள் மூலம் அறிவிப்பு, மற்ற வழக்கமான எரிபொருட்களுக்கு பதிலாக எல்பிஜி பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரையின் கீழ், சேர்க்கை / விழிப்புணர்வு முகாம்கள், நுகர்வோர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆதார் பதிவு செய்வதற்கு வசதி செய்தல் மற்றும் பிரதமரின் இலவச சமையல் சிலிண்டர் இணைப்புகளைப் பெறுவதற்கான வங்கிக் கணக்குகளைத் தொடங்குதல், சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

எல்பிஜி விநியோகஸ்தர்கள், பொது சேவை மையங்கள் ஆகியவற்றில் இலவச எரிவாயு இணைப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம், 5 கிலோ இரட்டை சிலிண்டர் இணைப்பு 14.2 கிலோவிலிருந்து 5 கிலோவாக மாற்று விருப்பம், புலம்பெயர்ந்த குடும்பங்கள் முகவரி சான்று, குடும்ப அட்டைக்கு பதிலாக சுய அறிவிப்பு மூலம் புதிய இணைப்பைப் பெறுவதற்கான வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

Tags :
Advertisement