ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்க தடை.. தலிபான் அரசின் முடிவுக்கு கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்..!!
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசாங்கம், 2021ல் அதிகாரத்திற்குத் திரும்பியதில் இருந்து, பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் தலிபானின் புதிய சட்டம் பெண்கள் மருத்துவம் படிக்க தடை விதித்துள்ளது,
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அங்கு பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் நெயில் பாலிஷ் செய்தால் விரல்கள் வெட்டப்படும், புர்கா அணியாமல் வெளியே செல்லும் பெண்களின் தலை துண்டிக்கப்படும். வேறு ஆண்களுடன் பொது இடத்தில் பெண்கள் பேசக்கூடாது. அலுவலக பணிக்கு பெண்கள் செல்லக்கூடாது, போன்ற பல கட்டுப்பாடுகளாள் பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்,
மாணவிகள் கல்வி பயில தடை விதித்ததால் மகளிருக்கான நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கு பல நாடுகளில் இருந்து கிளம்பிய எதிர்ப்பால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன் பின்னர் ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் தான் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்க தடை விதித்துள்ளது,.
ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே மருத்துவ மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள போதிலும், தலிபான் அரசாங்கம் பெண்கள் மருத்துவச்சி மற்றும் நர்சிங் படிப்புகளில் சேர்வதை தடை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலிபான் அரசின் இந்த உத்தரவுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான ரஷீத் கான் மற்றும் முகமது நபி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தலிபான் அரசின் இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இஸ்லாமிய போதனைகளில் கல்வி ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் அறிவைப் பின்தொடர்வதை வலியுறுத்துகிறது. குர்ஆன் கற்றலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது என ரஷீத் கான் தனது பதிவில் வலியுறுத்தினார்.
Read more ; ரூ.189க்கு ரீசார்ஜ்.. இந்த விலைக்கு 5ஜி டேட்டா யாரும் தரமுடியாது..!! ஜியோவின் சூப்பர் பிளான்