எப்புட்றா..? வெவ்வேறு அறை..!! நேர்ல கூட பார்த்தது இல்ல..!! பெண் கைதியை கர்ப்பமாக்கிய இளைஞர்..!! மருத்துவர்களே அதிர்ந்துபோன சம்பவம்..!!
அமெரிக்காவில் பொதுவாகவே பல விநோதமான சம்பவங்கள் நடக்கும். ஆனால், தற்போது நடந்துள்ள ஒரு சம்பவம் அனைத்தையுமே தூக்கிச் சாப்பிடுவதாக இருக்கிறது. சிறையில் இந்த பெண் கைதி ஒருவர், ஆண்கள் யாரையுமே நேரில் சந்திக்காமலேயே கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்துள்ளார். இந்தச் சம்பவம் அங்குச் சிறை மருத்துவர்களையே திகைக்க வைத்துள்ளது.
அமெரிக்காவின் மியாமியில் உள்ள டர்னர் கில்ஃபோர்ட் நைட் சிறையில் உள்ள பெண் கைதி டெய்சி லிங்க் (29). இவர், கொலைக் குற்றம் ஒன்றுக்காக 2022 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் இவர், திடீரென கடந்த ஜூலை மாதம் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். சிறையில் அவர் யாரையும் நேரில் சந்திக்கவில்லை என்று கூறப்படும் நிலையில், இது எப்படி நடந்தது என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
நடந்தது என்ன..?
அதாவது, அதே சிறையில் 24 வயதான ஜோன் டெபாஸ் என்ற ஆண் கைதி அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் சிறையில் வேறு பகுதியில் அடைக்கப்பட்டுள்ளார். இருவரும் நேரில் சந்திக்க வாய்ப்பே கிடையாது. ஆனால், அங்கிருந்த ஏர் கண்டிஷனிங் வென்ட் இருவரது அறைகளை இணைப்பதாகவே இருந்தது. இதன் மூலம் டெய்சி பேசுவதை ஜோன் டெபாஸால் கேட்க முடியும். அப்படியே இருவரும் மெல்லப் பேசத் தொடங்கியுள்ளனர்.
இருவருமே தனிமை சிறையில் இருந்ததால், பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாமல் தவித்து வந்துள்ளனர். இதனால், இருவருமே இந்த ஏசி வென்ட் மூலம் தினசரி பல மணி நேரம் பேசி பழகியுள்ளனர். அப்போது தான் ஒரு முறை டெபாஸ், தனக்குத் தந்தையாக வேண்டும் என்ற ஆசையிருப்பதாக கூறியுள்ளார். ஆனால், இப்போது சிறையில் இருப்பதால் அதற்கு வாய்ப்பில்லை என்று டெய்ஸியிடம் கூறி புலம்பியுள்ளார். டெபாஸ் கூறுவதைக் கேட்டு டெய்சி வேதனை அடைந்துள்ளார். இதையடுத்து இருவரும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டுள்ளனர்.
அந்த ஜெயிலின் ஏசி வென்ட் ஒரு எல் (L) வடிவில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். டெய்சி உள்ள அறையில் இருந்து எதைப் போட்டாலும் அது சரியாக டெபாஸ் அறையில் தான் வந்து விழுமாம். இதை தங்களுக்குத் தாகமாக அவர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். அதாவது, டெய்சி பெட்ஷீட்டை தனது அறையில் இருந்து வென்ட் மூலம் போட்டுள்ளார். அது டெபாஸ் அறைக்கு வந்துள்ளது. டெபாஸ் தனது விந்தணுவை ஒரு பிளாஸ்ட்டிக் பேக்கில் போட்டு, அந்த பெட்டிஷீட்டில் கட்டிவிடுவாராம். அதை டெய்சி எடுத்துக் கொள்வார்.
இப்படியே தினசரி 5 முறை விகிதம் ஒரு மாதம் முழுக்க டெபாஸ் விந்தணுவை அனுப்பியுள்ளார். அதை டெய்சி தனது பெண்ணுறுப்பின் வழியாகச் செலுத்திக் கொள்வாராம். இதன் மூலமாகவே அவர் கர்ப்பமாகி குழந்தையும் பெற்றெடுத்துள்ளார். பிறந்த குழந்தைக்கு நடத்தப்பட்ட மரபணு சோதனையில் டெபாஸ் தான் தந்தை என்பது உறுதியாகியுள்ளது. டெய்சியை பார்த்துக் கூட இல்லை என்றே டெபாஸ் கூறுகிறார். சிறை நிர்வாகத்தினரும் இருவரும் சந்திக்கக் கூட வாய்ப்பே இல்லை என்கிறார்கள். அதேநேரம் டெய்சி குடும்பத்தினர் கூட இவர்கள் சொல்வதை நம்பவில்லையாம்.
இருப்பினும், மருத்துவ ரீதியாக இது சாத்தியம் தான் என்கிறார் மியாமியின் கருவுறுதல் மையத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் பெர்னாண்டோ. இதுகுறித்து அவர் கூறுகையில், "இதற்கு முன்பு வரை இப்படி ஒன்றை நான் கேள்விப்பட்டது இல்லை. ஆனால், மருத்துவ ரீதியாக இதற்கு வாய்ப்புள்ளது. இந்த வழியில் கர்ப்பமாக 5% கீழ் தான் வாய்ப்புள்ளது. இருந்தாலும் அந்த பெண் கருவுற்று இருக்கிறார். இது அதிசயம்தான்" என்று தெரிவித்துள்ளார். அதேநேரம் அவர்கள் சொல்வது உண்மைதானா என்பதையும் உறுதி செய்யச் சிறை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
Read More : அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்களுக்கு விடுமுறை..!! ஏப்ரல் மாதம் முதல் அமல்..!! என்ன காரணம் தெரியுமா..?