For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வேகமாக பரவும் ஜேஎன் 1 வகை கொரோனா.! தடுப்பூசிகளால் தடுத்து நிறுத்த முடியுமா.? மருத்துவர்களின் விளக்கம்.!

01:08 PM Dec 20, 2023 IST | 1newsnationuser4
வேகமாக பரவும் ஜேஎன் 1 வகை கொரோனா   தடுப்பூசிகளால் தடுத்து நிறுத்த முடியுமா   மருத்துவர்களின் விளக்கம்
Advertisement

தற்போது ஜேஎன்1 வகை கொரோனா தொற்று நாடெங்கிலும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து இருக்கிறது. கேரளாவில் கண்டறியப்பட்டு இருக்கும் இந்த புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. புதிய கொரோனா தொற்று குறித்த அச்சமும் பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இன்னிலையில் நாம் எடுத்துக் கொண்ட தடுப்பூசிகள் இதற்கு பலனளிக்குமா என மருத்துவர்கள் விளக்கம் அளித்திருக்கின்றனர்.

Advertisement

கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி கேரளாவை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று முதலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. மத்திய மற்றும் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த புதிய வகை கொரோனா பரவல் குறித்து விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்து வருகின்றனர். இந்த கொரோனா வகை ஓமிக்ரான்பிஏ. 2.86 வகையுடன் நெருங்கிய தொடர்புடையது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நாம் கொரோனா தொற்றிற்காக எடுத்துக் கொண்ட தடுப்பூசிகள் இந்த புதிய வகை கொரோனாவிற்கு எதிராக பலனளிக்குமா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் மருத்துவர்கள் "நிச்சயமாக பலனளிக்கும் என தெரிவித்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து பேசியிருக்கும் அவர்கள் எந்த வகை கொரோனாவிற்கு எதிராகவும் தடுப்பூசிகள் பலனளிக்கக் கூடியவை. அவை நோயின் தீவிர பாதிப்புகளை கட்டுப்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் தடுப்பூசிகளின் தாக்கத்தை அதிகப்படுத்துவதற்கு பூஸ்டர் வேக்சின்கள் எடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். முக கவசம் தனிமனித இடைவெளி மற்றும் தூய்மை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் பொது மக்களுக்கு தெரிவித்திருக்கின்றனர். தீவிரமான காய்ச்சல் தலைவலி மற்றும் சுவாச பிரச்சனை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

Tags :
Advertisement