விவசாயிகள் போராட்டத்தில் 'கற்பழிப்புகள், கொலைகள் நடந்தன!. கங்கனா ரனாவத் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!
Kangana Ranaut: பாரதிய ஜனதா கட்சி எம்பி கங்கனா ரனாவத், விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக சமீபத்தில் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டைனிக் பாஸ்கருக்கு அளித்த பேட்டியில், விவசாயிகள் போராட்டத்தின் போது "கலவர வன்முறை" நடந்ததாகக் கூறி ரனாவத் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். "கற்பழிப்பு மற்றும் கொலைகளும் நடந்தன. விவசாய மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது, இல்லையெனில் இந்த மக்கள் நீண்டகாலத் திட்டம் வைத்திருந்தனர். அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கலாம்." விவசாயிகளை "கொலைகாரர்கள்" மற்றும் "கற்பழிப்பாளர்கள்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தேசத்தின் தலைமை வலுவாக இல்லாமல் போயிருந்தால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து தேசம் அறியாது. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. நான் எப்போதும் பெண்களின் பாதுகாப்புக்கு குரல் கொடுப்பேன். அதில் நான் உறுதியாக உள்ளேன்” என கங்கனா தெரிவித்தார். இந்த சூழலில் கங்கனாவின் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலளித்த காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷிரினேட், "நமது நாட்டின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதாக மோடி அரசு கருதினால், இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல், காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் ராஜ்குமார் எதிர்வினை ஆற்றியுள்ளார். கங்கனா மீது பஞ்சாப் அரசு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், பாஜக இது தொடர்பாக தெளிவான விளக்கம் தர வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
Readmore: கோவிட்-19 தொற்றாக மாறுகிறதா Mpox?. பொதுமுடக்கம் சாத்தியமா?. விஞ்ஞானிகள் கூறுவது என்ன?