முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 7 நாட்களில் தூக்கு..!! மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு..!!

Chief Minister Mamata Banerjee has said that the law to hang the convicts of sexual assault within 7 days will be passed next week.
04:14 PM Aug 28, 2024 IST | Chella
Advertisement

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 7 நாட்களில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் அடுத்த வாரம் நிறைவேற்றப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் கூறுகையில், ”மேற்கு வங்க சட்டப்பேரவை அடுத்த வாரம் கூட்டப்படும். அப்போது, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 10 நாட்களுக்குள் மரண தண்டனையை உறுதி செய்வதற்கான மசோதாவை நிறைவேற்றுவோம். இந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த மசோதாவுக்கு அவர் ஒப்புதல் தரவில்லை என்றால், நாங்கள் ராஜ்பவன் வெளியே உட்காருவோம்” என்று தெரிவித்தார்.

மேலும், பாலியல் வன்கொடுமை வழக்குகள் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு 7 நாட்களுக்குள் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் எனது அரசு விரும்புகிறது என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேலும் அவர், நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தை நோக்கி அணிவகுத்துச் சென்ற போராட்டக்காரர்களை எதிர்கொள்வதில் மாநில காவல்துறையின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. அதற்காக நான் அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். ஆனால், பாஜகவின் சதி வெற்றிபெறும் வகையில் ஒரு உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, பாஜக அழைப்பு விடுத்துள்ள பந்த் காரணமாக மேற்கு வங்கத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நாடியாவில் திரிணாமுல் - பாஜக தொண்டர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது. ஆங்காங்கே ரயில் மறியல், சாலை மறியல், கடைகளை மூட வற்புறுத்தல் என பாஜகவினர் பந்த்தை முழு வீச்சில் அமல்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

Read More : முதல் மாநாடு..!! உறுதியான இடம்..!! அனுமதி கோரி தமிழக வெற்றிக் கழகம் மனு..!!

Tags :
தூக்கு தண்டனைபாலியல் வன்கொடுமைமம்தா பானர்ஜி
Advertisement
Next Article