ஷாக்!. உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகியது அமெரிக்கா!. உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்!. என்ன காரணம்?
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்காவை அதிகாரப்பூர்வமாக விலக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகளில் டொனால்டு ட்ரம்ப் நீண்டகாலமாகவே அதிருப்தி தெரிவித்து வருகிறார். அந்தவகையில், கோவிட் தொற்று உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவிய போது, உலக சுகாதார அமைப்பு தனது கடமையை சரியாக செய்யவில்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். கொரோனா காலகட்டத்தில் சீனாவுக்கு சாதகமான முடிவுகளை உலக சுகாதார நிறுவனம் எடுத்ததாக குற்றச்சாட்டுகள் வெளியாகின. இந்தநிலையில், அதிபராக பதவியேற்ற உடன் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்காவை அதிகாரப்பூர்வமாக விலக்கும் நிர்வாக உத்தரவில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
உலக சுகாதார நிறுவனம் சுந்திரமாக செயல்படத் தவறிவிட்டதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனத்து 2024-25ம் நிதியாண்டின் பட்ஜெட்டில் அமெரிக்காவின் நிதி பங்களிப்பாக 662 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முடிவு உலக சுகாதார அமைப்பிற்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் உலக சுகாதார அமைப்பு பெறும் நிதியுதவியில் 16 சதவீதத்தை அமெரிக்காதான் தருகிறது.