For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அட ராமராஜன் மகளா இவங்க..!! இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!

01:19 PM Apr 23, 2024 IST | Mari Thangam
அட ராமராஜன் மகளா இவங்க     இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்
Advertisement

80களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருந்தவர் ராமராஜன். 1977-ம் ஆண்டு மீனாட்சி குங்குமம் என்ற படத்தின் மூலம் சிறிய கேரக்டரில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். 1987ல் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

Advertisement

ஒருகட்டத்தில் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்க அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் அதிலிருந்தும் ஒருகட்டத்துக்கு மேல் ஒதுங்கினார். தமிழ் சினிமாவில் சோலோ ஹீரோவாக மட்டுமே அதிக படங்கள் நடித்தவர் என்ற பெருமை ராமராஜனுக்கு மட்டும்தான் உண்டு. பல வருடங்களுக்கு பிறகு சாமானியன் திரைப்படத்தின் மூலம் ரீ-எண்ரீ கொடுத்துள்ளார். ராகேஷ் என்பவர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ராமராஜனுடன் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனத்தையும் ஈர்த்துள்ளது. படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

இந்தச் சூழலில் அவரது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்படியே நளினியை போல் இருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். ராமராஜனுக்கு ஒரு மகனும் இருக்கிறார். மகனும், மகளும் ட்வின்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement