For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இவன் நெஜமாவே என் பையனா..? DNA டெஸ்ட் எடுத்த பிரபல நடிகர்..!! இப்படியா செய்வீங்க.. ரசிகர்கள் காட்டம்

Fans are shocked to hear Abbas talking about his son in an interview
01:56 PM Nov 24, 2024 IST | Mari Thangam
இவன் நெஜமாவே என் பையனா    dna டெஸ்ட் எடுத்த பிரபல நடிகர்     இப்படியா செய்வீங்க   ரசிகர்கள் காட்டம்
Advertisement

நடிகர் அப்பாஸ் 90-களில் சினிமாவுக்குள் வந்து 2000-களின் ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க ஹீரோவாக வலம் வந்துகொண்டிருந்தார். அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கமலுடன் பம்மல் கே சம்பந்தம், ரஜினியுடன் படையப்பா என முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக பெண் ரசிகைகளை அதிகம் கொண்டிருந்த அவர், சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென பட வாய்ப்புகள் குறைந்துபோக ஆள் காணாமல் போனார்.

Advertisement

டைசியாக 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பச்சக்கள்ளம் படத்தில் நடித்தார். அதன் பிறகு வெளிநாட்டுக்கு சென்று செட்டிலாகிவிட்டார். தற்போது அவர் இந்தியாவுக்கு வந்துவிட்டார். நாடு திரும்பிய பிறகு அப்பாஸ் பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதில் ஒரு பேட்டியில் தன் மகன் பற்றி அப்பாஸ் பேசியதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அந்தப் பேட்டியில், அவர், “எனது மூத்த மகன் ரொம்பவே அமைதியானவர். நான் அவர் வயதில் இருக்கும்போது ஏகப்பட்ட கூத்துக்களையும், கலாட்டாக்களையும் செய்திருக்கிறேன். ஆனால், அவரோ அப்படி கிடையாது. அதனால் அவர் என்னுடைய மகன்தானா என்று ஆச்சரியமாகவும் இருந்தது சந்தேகமாகவும் இருந்தது. எனவே, டிஎன்ஏ டெஸ்ட் செய்து பார்த்து அவர் என்னுடைய மகன்தான் என்று சொன்னார்கள்” என்றார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ரசிகர்கள், பையன் சமத்தா, அமைதியாக இருந்தால் சந்தோஷப்பட வேண்டியது தானே. அதை விட்டுட்டு இவன் நம் மகன் தானா என டி.என்.ஏ. பரிசோதனை எல்லாம் செய்தது ரொம்ப ஓவர். பெத்த பிள்ளையை இப்படியா சந்தேகப்படுவது. நல்ல வேளை பார்த்தீங்க ப்ரோ என தெரிவித்துள்ளனர்.

Read more ; ரேஷன் பாமாயில் சமையலுக்கு பயன்படுத்த தயக்கமா? அப்ப இப்படி யூஸ் பண்ணி பாருங்க.. அவ்வளோ நல்லது..!!

Tags :
Advertisement