முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ராமர் கோயில் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு... உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை...!

07:04 AM Jan 22, 2024 IST | 1newsnationuser2
Advertisement

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கவில்லை, என்று கூறி, தமிழக அரசுக்கு எதிராக பா.ஜ.க‌ தரப்பில் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வருகிறது.

Advertisement

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கருவறை மற்றும் ஐந்து மண்டபங்கள் உட்பட ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த கோயில் இன்று திறக்கப்படுகிறது. பிரதமர் மோடி ராமர் கோயிலை திறந்து வைக்கும் நிலையில் இந்த கோயிலில் குழந்தை வடிவ ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

அயோத்தி ராமர் நிகழ்ச்சி கோவில்களில் சிறப்பு ஒளிபரப்பு செய்யக்கூடாது என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியது. இதற்கு எதிராக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்வாக சீதாராமன் உள்ளிட்டோ இருக்கட்டும் கண்டனங்களை தமிழக அரசுக்கு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி இது தொடர்பாக பாஜக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கவில்லை, என்று கூறி, தமிழக அரசுக்கு எதிராக பா.ஜ.க‌ தரப்பில் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வருகிறது.

Tags :
annamalaiBJPnirmala sitaraman
Advertisement
Next Article