For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சென்னையில் ஆட்டத்தை தொடங்கிய ஃபெஞ்சல் புயல்..!! பலத்த காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை..!!

Cyclone 'Fenjal', centered over the southwest Bay of Bengal, is moving at a speed of 12 kmph.
09:54 AM Nov 30, 2024 IST | Chella
சென்னையில் ஆட்டத்தை தொடங்கிய ஃபெஞ்சல் புயல்     பலத்த காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை
Advertisement

தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘ஃபெஞ்சல்’ புயல் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

Advertisement

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுபெற்றது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் காரணமாக மணிக்கு 50 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது. பலத்த காற்றினால் மரங்கள் அங்கும், இங்கும் ஆடுகின்றன. புயல் கரையைக் கடக்கும் வரை இப்படியான தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், தற்போது வேகமெடுத்துள்ளது. அதன்படி, இப்போது புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

ஃபெஞ்சல் புயல் இன்று காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Read More : ஒருவாரத்திற்கு தேவையான உணவுகளைப் பொருட்களை ரெடியா வெச்சிக்கோங்க..!! அறிவிப்பு வந்ததும் உடனே செல்லுங்கள்..!! வெளியான எச்சரிக்கை..!!

Tags :
Advertisement