For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ராமர் கோவில் கும்பாபிஷேகம்!… இன்று எங்கு, யாருக்கெல்லாம் விடுமுறை?… முழு விவரம் இதோ!

06:43 AM Jan 22, 2024 IST | 1newsnationuser3
ராமர் கோவில் கும்பாபிஷேகம் … இன்று எங்கு  யாருக்கெல்லாம் விடுமுறை … முழு விவரம் இதோ
Advertisement

உத்தரப்பிரேதச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக பங்கேற்று குழந்தை ராமர் சிலையை சுமந்து சென்று கருவறையில் பிரதிஷ்டை செய்யய உள்ளார். இந்த விழாவில் சுமார் 7,000 பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாக நடைபெற உள்ள ராமர் கோவில் திறப்பு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் இன்று அரை நாள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது .

Advertisement

அயோத்தி ராமர் கோவில் அமைந்திருக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை “ராஷ்டிர உத்சவ்” (தேசிய விழா) என்று குறிப்பிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பொது விடுமுறை அறிவிப்பு.

இதேபோல் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கோவா அரசு அனைத்து மாநில அரசுத் துறை, தன்னாட்சி அமைப்புகள், கார்ப்பரேஷன்கள் மற்றும் மாநில அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கிறது என தெரிவித்துள்ளது. ஹரியானா அரசும் இன்று அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவித்துள்ளது. அன்றைய தினம் மது விற்பனைக்கு தடை விதித்து ‘dry day’ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல், அதே நேரத்தில் குஜராத், ராஜஸ்தான், திரிபுரா, அசாம் உத்தரகாண்ட், ஒடிசாவில் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை அரை நாள் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குச் சந்தைகள் அனைத்தும் காலை 9 மணிக்கு பதிலாக மதியம் 2.30 மணிக்கு திறக்கப்பட்டு, மாலை 5 மணிவரை செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள ரிலையன்ஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு இன்று விடுமுறை என அறிவித்துள்ளது.

கும்பாபிஷேக விழாவையொட்டி தமிழகத்திலும் பொதுவிடுமுறை அறிவிக்கவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதவிர பொது விடுமுறையை எதிர்த்து 4 சட்டக் கல்லூரி மாணவர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement