For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ராமர் கோயில் கும்பாபிஷேகம்..!! திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு..!! PVR சினிமாஸ் அறிவிப்பு..!!

11:26 AM Jan 20, 2024 IST | 1newsnationuser6
ராமர் கோயில் கும்பாபிஷேகம்     திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு     pvr சினிமாஸ் அறிவிப்பு
Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, கர்ப்ப கிரகத்தில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளார். கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.

Advertisement

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வை நேரடியாக திரையரங்குகளில் ஒளிபரப்ப உள்ளதாக முன்னணி மல்டிபிளக்ஸ் நிறுவனமான PVR INOX அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 70-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 160-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் Aaj Tak செய்தி சேனலுடன் இணைந்து விழாவை நேரடியாக ஒளிபரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement