முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ராமர் கோயில் பிரதிஷ்டை விழா..!! இந்தியா முழுவதும் ரூ.500 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை..!!

04:42 PM Jan 21, 2024 IST | 1newsnationuser6
Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், நடிகர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை திறந்து வைக்க உள்ளார்.

Advertisement

நாளை நடைபெறவுள்ள இந்த ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள இந்திய மக்கள் கொண்டாடுகின்றனர். இந்நிலையில், ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு சிவகாசி உட்பட இந்தியா முழுவதும் 500 கோடி வரை பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கணேசன் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும், ஆண்டுதோறும் ஜனவரி 22ஆம் தேதியை இந்திய தேசத்தின் தேசிய திருவிழா நாளாக அறிவித்து, தீபாவளி போல ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட வேண்டும் என அவர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

Tags :
அயோத்திஉத்தரப்பிரதேசம்ராமர் கோயில் பிரதிஷ்டை விழாரூ.500 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை
Advertisement
Next Article