For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ராமர் கோவில் உட்புறத் தோற்றம் வீடியோ: "இரும்பு, ஸ்டீல் இல்லை" கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிட கலை அதிசயம்.!

04:08 PM Jan 20, 2024 IST | 1newsnationuser7
ராமர் கோவில் உட்புறத் தோற்றம் வீடியோ   இரும்பு  ஸ்டீல் இல்லை  கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிட கலை அதிசயம்
Advertisement

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு இன்னும் இரண்டு நாட்களே மீதமுள்ள நிலையில் ராமர் கோவில் கட்டிடத்தின் உட்புற தோற்றம் பற்றிய அழகிய வீடியோவை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோவில் பிரம்மாண்டமான ராமர் கோவிலின் பளிங்கு கற்களை கொண்டு செய்யப்பட்ட படிக்கட்டுகள் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கும்பாபிஷேகத்திற்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

Advertisement

மேலும் இந்த காணொளியில் ராமர் கோவிலின் பெருமையை பறைசாற்றும் வகையில் அதன் கட்டிடக்கலை தொழில்நுட்பம் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது. வட இந்தியாவில் கோவில்கள் கட்டுவதற்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்த நகரா கட்டிடக்கலை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இராமர் கோவிலும் கட்டப்பட்டிருக்கிறது . இந்தக் கோவிலின் கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு பணிகளில் ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானிகளும் ஈடுபட்டதாக ராமர் கோவில் கட்டுமான பணிகளின் சேர்மன் ஸ்ரீ நிர்பேந்தர மிஸ்ரா தெரிவித்து இருக்கிறார்.

ராமர் கோவிலுக்கான கட்டிடத்தை சந்திராகாந்த் சோம்புரா என்பவர் வடிவமைத்திருக்கிறார் . இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 15 தலைமுறைகளாக கோவில் வடிவமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ராமர் கோவில் கட்டிடம் முழுவதும் கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் ஒரு கட்டிடம் ஆகும். இதில் ஸ்டீல் இரும்பு மற்றும் சிமெண்ட் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என்பது ஒரு சிறப்பம்சம் . 2.7 ஏக்கர் பரப்பளவில் 57 ஆயிரம் சதுர அடியில் மூன்று அடுக்குகளை கொண்டதாக உருவாகி இருக்கும் ராமர் கோவில் சிறப்பு வாய்ந்த கிரானைட் பளிங்கு கற்கள் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் கிடைக்கும் அரிய வகை சிவப்பு கற்களான பன்சி பகர்பூர் கற்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ராமர் கோவிலின் கருவறை வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது .

தூர்தர்ஷன் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் ராமர் கோவிலின் படிக்கட்டுகள் பளிங்கு கற்களால் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் அமைக்கப்பட்டிருக்கும் தூண்கள் வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு கான்போரின் கண்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும் பிரம்மாண்டமான கட்டிடக்கலையின் வடிவமாக இருக்கும் ராமர் கோவிலின் உட்புறத்தில் அழகிய மலர்களை கொண்டு அமைக்கப்பட்ட மாலைகளை தோரணங்களாக கட்டி தொங்க விட்டுள்ளனர். இதனைக் காண்போர் மெய் மறந்து விடுகின்றனர். இந்திய கட்டிடக்கலையின் மற்றொரு மைல் கல்லாக விளங்கும் ராமர் கோவிலின் எழில் கொஞ்சும் தோற்றம் இந்தக் காணொளியின் மூலம் அனைத்து மக்களுக்கும் காணக் கிடைத்திருக்கிறது.

முழுவதுமாக கற்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கோவில் இந்திய கட்டிடக்கலையின் சிறப்பம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் தலைசிறந்த பொறியாளர்கள் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளின் பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் இந்திய கட்டிடக்கலையை மற்றொரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. பிரம்மாண்டமான ராமர் கோவிலின் முதல் தளத்தில் 160 வரிசைகளும் இரண்டாவது தளத்தில் 1 32 வரிசைகளும் மூன்றாவது தளத்தில் 74 வரிசைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ராமர் கோவிலின் கருவறை மக்ரானா வகை வெள்ளை பொலங்கி கற்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அடையாளமாகவும் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் விளங்கும் தாஜ்மஹால் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பலிங்கு கற்களும் மக்ரானா சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்பது சிறப்பம்சமாகும். ஆயிரம் ஆண்டுகள் அசைக்க முடியாத பிரம்மாண்டத்துடன் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலின் உட்புறத் தோற்றம் மனதிற்கு ரம்யமாகவும் கண்களுக்கு அழகாகவும் இருப்பதோடு மனதை மெய்மறக்கச் செய்வதாக சமூக வலைதல வாசிகள் தெரிவித்துள்ளனர்.

முழுவதுமாக கற்களைக் கொண்டே கட்டமைக்கப்பட்டிருப்பதால் பூகம்பம் போன்றவற்றால் ராமர் கோவில் சேதம் அடையாத எனவும் ஆராய்ச்சியாளர்களும் கட்டிடக்கலை நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். இந்திய கட்டிடக்கலையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் இந்திய கட்டிடக்கலையை உலகிற்கே பறைசாற்றும் வகையில் இந்த கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். தூர்தர்ஷன் வெளியிட்டு இருக்கும் இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement