For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அயோத்தி: ராமர் கோவில் திறப்பு விழாவால் ஷேர் மார்க்கெட்டில் உயரும் பங்குகள்.! முழு விவரம்.!

03:32 PM Jan 10, 2024 IST | 1newsnationuser7
அயோத்தி  ராமர் கோவில் திறப்பு விழாவால் ஷேர் மார்க்கெட்டில் உயரும் பங்குகள்   முழு விவரம்
Advertisement

மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் நடைபெற இருக்கிறது. உலகெங்கிலும் இருந்து 7000 சிறப்பு அழைப்பாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கின்றனர் அயோத்தி நகரில் பல முதலீடுகளை செய்து அந்த நகரை ஒரு ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதன் விளைவாக அயோத்தி நகரில் பல சந்தைகள் அசுர வளர்ச்சியை எட்ட ஆரம்பித்திருக்கிறது.

Advertisement

ராமர் கோவில் திறப்பு விழாவால் அயோத்தி நகரின் பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என பொருளாதார வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து கோவில் திறக்கப்பட்டதிலிருந்து ஒரு மாத காலத்திற்கு 3 முதல் 5 லட்ச பக்தர்கள் தினமும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அயோத்தியின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்காற்றும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகப்படியான பக்தர்களின் வருகையால் சுற்றுலா விமான சேவைகள் ரயில் போக்குவரத்து மற்றும் ஹோட்டல் நிர்வாகம் ஆகிய துறைகள் அசுர வளர்ச்சி அடையும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டல்கள்: அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு அயோத்தி மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் ஹோட்டல் தொழில் சார்ந்த நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறது. பங்குச்சந்தையிலும் இவற்றின் பங்குகள் அபார வளர்ச்சியை கண்டிருக்கின்றன . பிராவேக் லிமிடெட் என்ற ஹோட்டல் நிறுவனத்தின் பங்குகள் 70.59 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இந்த ஹோட்டல் நிறுவனம் ஜனவரி 15ஆம் தேதியிலிருந்து தனது சேவையை தொடங்க இருக்கிறது. மேலும் இந்த ஹோட்டலில் 75 சதவீத அறைகள் புக் செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் நட்சத்திர ஹோட்டல்களான ஐடிசி மற்றும் இஐஎச் லிமிடெட் போன்ற நிறுவனங்களும் அயோத்தியில் நட்சத்திர விடுதிகளை திறப்பதற்கு தயாராகி வருகிறது. ஐடிசி ஹோட்டல் செயின் அயோத்தியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் 7 நட்சத்திர விடுதி ஒன்றை கட்டி வருகிறது. ஐடிசி நட்சத்திர ஹோட்டல்களின் பங்குகள் 2.81% அதிகரித்து இருக்கிறது. மேலும் ஐஎச்சிஎல் ஹோட்டல் பங்குகளும் 3.78% அதிகரித்துள்ளது. டிசம்பர் 19ஆம் தேதியிலிருந்து அயோத்தியில் ஹோட்டல்களின் வாடகை நாள் ஒன்றுக்கு 17,000 ரூபாயிலிருந்து 73,000/- ரூபாய் வரை இருக்கிறது. அயோத்தி நகரில் ஸ்மார்ட் கூடாரங்கள் முழுவதுமாக புக் செய்யப்பட்டிருக்கின்றன. குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்தக் கூடாரங்களுக்கு வாடகையாக நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி 22 ஆம் தேதி இந்த ஆடம்பர கூடாரத்தின் அனைத்து அறைகளும் புக் செய்யப்பட்டிருக்கிறது.

விமான சேவைகள்: அயோத்தி சர்வதேச விமான நிலையம் பிரதமர் நரேந்திர மோடியால் டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில் சேவைகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இண்டிகோ நிறுவனம் டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களில் இருந்து அயோத்திக்கு விமான சேவைகளை இயக்கி வருகிறது. ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு விமான டிக்கெட்டுகளின் விளையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாக பங்குச்சந்தையில் இண்டிகோ நிறுவனத்தின் பங்குகள் 3.17% உயர்ந்திருக்கிறது மேலும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்குகள் 2.05% வளர்ச்சியடைந்துள்ளது.

இரயில்வே துறை: ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தி நகருக்கு 1,000 ரயில்களை இயக்குவதற்கு இந்தியன் ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து எளிதாக அயோத்தியை சென்றடையும் வகையில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட இருக்கின்றன. மேலும் இந்திய ரயில்வேயின் பங்குகள் கடந்த மாதத்திலிருந்து 20.44% வளர்ச்சி அடைந்திருக்கிறது . மேலும் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளும் 3.73% வளர்ச்சியை எட்டி இருக்கிறது.

சுற்றுலாத்துறை: இந்திய சுற்றுலாவில் முன்னணி நிறுவனங்களான தாமஸ் குக் இந்தியா பிரைவேட் லிமிடெட், புக்கிங் டாட் காம்,மேக் மை ட்ரிப் மற்றும் ஈசி மை ட்ரிப் போன்ற நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்திருக்கிறது. இந்த நிறுவனங்கள் விமானங்கள் மற்றும் ஹோட்டல்களின் விலை உயர்வினால் அதிக லாபம் கண்டிருக்கின்றன. ஈசி மை ட்ரிப் நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஐந்து நாட்களில் 13% உயர்ந்துள்ளது. மேலும் அயோத்தி நகரில் அமைந்திருக்கும் அப்பல்லோ சிந்துரி என்ற நட்சத்திர விடுதி பங்குச்சந்தையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 27.08% உயர்ந்திருக்கிறது. இந்த விடுதியில் மிகப்பெரிய அளவிலான பார்க்கிங் மற்றும் ரூப் டாப் ரெஸ்டாரன்ட் வசதிகளும் அமைந்திருக்கின்றன.

Tags :
Advertisement