2026-ஐ வரவேற்கும் மழை..!! தமிழ்நாடு முழுவதும் சம்பவம் இருக்கு..!! வெதர்மேன் கொடுத்த வானிலை அப்டேட்..!!
தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழையின் ஆட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. வானிலை ஆய்வு மையம் கூறியதுபோல, நேற்றில் இருந்தே ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் நாளை முதல் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”இன்று மாஞ்சோலை மலைப்பகுதி, ஊத்து, நாலுமூக்கு ஆகிய பகுதியில் கனமழை பெய்யும். நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும்” என கூறியுள்ளார். அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் எந்தெந்த இடங்களில் அதிகமான மழை பதிவாகியுள்ளது என்பதற்கான விவரத்தையும் வெளியிட்டுள்ளார்.
அதில், ”டிசம்பர் 30ஆம் தேதி காலை 8.30 மணி முதல் டிசம்பர் 31 காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 140 மில்லி மீட்டரும், நாலுமூக்கு பகுதியில் 128 மில்லி மீட்டரும், ககாச்சி பகுதியில் 118 மில்லி மீட்டரும், மாஞ்சோலை பகுதியில் 102 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. இன்றும் இந்த பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : செல்வமகள் சேமிப்பு திட்டம் முதல் ஜிஎஸ்டி வரி உயர்வு வரை..!! நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்..!!