மழை வெளுத்து வாங்கப்போகுது.. 16 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை.. எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா?
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, லட்சத்தீவு மற்றும் அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு நோக்கி நகர்ந்து, அதற்கு அடுத்த 2,3 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Read more ; ரத்தன் டாடாவின் ஆரோக்கியத்திற்கான அர்ப்பணிப்பு..!! டாடா சால்ட் தோற்றத்தின் நோக்கம் என்ன?