For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Rain | கடலில் நிகழ்ந்த மாற்றம்..!! தமிழ்நாட்டில் இன்று சம்பவம் இருக்கு..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

08:16 AM Feb 27, 2024 IST | 1newsnationuser6
rain   கடலில் நிகழ்ந்த மாற்றம்     தமிழ்நாட்டில் இன்று சம்பவம் இருக்கு     வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Advertisement

தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பிப்ரவரி 27ஆம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக உள் மாவட்டங்கள், ஏனைய வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக் கூடும். பிப்ரவரி 28ஆம் தேதி முதல் மார்ச் 3ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 27 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும் என்றும் உள் தமிழகத்தில் அதிக வெப்ப நிலை காரணமாக ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்ப நிலை 33 - 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்ப நிலை 25 - 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Lok Sabha | பாஜகவுக்கு 18.48%, அதிமுகவுக்கு 17.26% வாக்குகள்..!! தனியார் செய்தி நிறுவனத்தை வெச்சு செய்யும் அதிமுகவினர்..!!

தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று (பிப்ரவரி 27) குமரிக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Advertisement