அடடே அப்படியா.! இந்தியாவுக்கு வந்தாச்சு புல்லட் ரயில்.! முதல் டெர்மினல் புகைப்படத்தை பகிர்ந்த ரயில்வே அமைச்சர்.!
இந்தியாவில் புல்லட் ரயில் சேவை முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் முதல் ரயில் மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளது. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை பற்றியும் புல்லட் ரயில் சேவைகள் இயற்கை இருக்கும் மற்ற நகரங்கள் பற்றிய அறிவிப்பையும் ரயில்வே துறை வெளியிட்டிருந்தது.
மும்பை மற்றும் அகமதாபாத் இடையே இருக்கும் 58 கிலோ மீட்டர் தூரத்தை புல்லட் ரயில் மூலம் இரண்டு மணி நேரத்தில் கடக்கலாம் என ரயில்வே துறையை அறிவித்திருந்தது. நாள் ஒன்றுக்கு 70 முறை மும்பை மற்றும் அகமதாபாத் இடையே ரயில் போக்குவரத்து நடைபெறும் எனவும் தெரிவித்திருக்கிறது
இந்நிலையில் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவா அகமதாபாத்தில் கட்டப்பட்டிருக்கும் புல்லட் ரயில் டெர்மினளின் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அகமதாபாத்தில் உள்ள சபர்மதி மல்டி மாடல் டிரான்ஸ்போர்ட் ஹப் என்று அழைக்கப்படும் பகுதியில் புல்லட் ரயில் காண டெர்மினல் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது. அதன் புகைப்படங்களை சமூக வலைதளமான எக்ஸில் பகிர்ந்திருக்கிறார் ரயில்வே அமைச்சர்.