For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Railway Jobs 2024 | கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள்..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!!

08:31 AM Feb 19, 2024 IST | 1newsnationuser6
railway jobs 2024   கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள்     விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
Advertisement

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 5,696 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Railway Jobs 2024 | இந்திய ரயில்வேயில் அசிஸ்டென்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot (ALP)) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5,696 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இன்றைக்குள் (பிப்.19) விண்ணப்பிக்க வேண்டும்.

அதாவது, அசிஸ்டென்ட் லோகோ பைலட் பணியிடங்களுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 5,696. இதற்கு கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ படித்திருக்க வேண்டும் அல்லது Diploma in Engineering or Bachelor’s Degree in Engineering படித்திருக்க வேண்டும். இதற்கான வயது வரம்பு 01.07.2024 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. இந்த பணிகளுக்கு மாதச் சம்பளம் ரூ.19,900 வழங்கப்படும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250 ஆகும்.

RRB NTPC Notification 2024, Application Form, Eligibility, Fee

Read More : https://1newsnation.com/national-parties-are-no-longer-in-alliance-with-anyone-aiadmk-general-secretary-edappadi-palaniswami-in-action/

Tags :
Advertisement