For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெரியார் குறித்த கேள்வி..!! உச்சகட்ட கோபமடைந்த சீமான்..!! முகம் சுளிக்க வைத்த அந்த வார்த்தை..!! நேரலையில் பரபரப்பு..!!

Seeman's inappropriate use of language during a live event watched by the public has caused a huge stir.
01:49 PM Jan 24, 2025 IST | Chella
பெரியார் குறித்த கேள்வி     உச்சகட்ட கோபமடைந்த சீமான்     முகம் சுளிக்க வைத்த அந்த வார்த்தை     நேரலையில் பரபரப்பு
Advertisement

சீமான் மீது அதிருப்தி கொண்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மாற்றுக்கட்சியினர் என சுமார் 3,000 பேர் இன்று திமுகவில் இணைந்து கொண்டனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதலமைச்சரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின் தலைமையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வு குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துக்கள். திமுகவையே எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் தான் சென்று வளர்க்க வேண்டியுள்ளது” என்றார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, தனியார் செய்தி நிறுவனத்திற்கு சீமான் பிரத்யேகமாக பேட்டியளித்திருந்தார். அப்போது, அவர் கூறி சில சில தகாத வார்த்தைகள் கேட்போரை முகம் சுளிக்க வைத்தது. அவர் கூறுகையில், “நாம் தமிழர் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் இன்னும் கூட வேண்டுமென்றால் சொல்லுங்கள் ஆட்களை அனுப்பி வைக்கிறோம்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “எப்படி அம்பேத்கரையும், பெரியாரையும் ஒப்பிட்டு பார்க்க, பேச முடியும்..? சூத்திரர்களை வேசி மகன் கூறியவர் என சில தகாத வார்த்தைகளை சீமான் கூறினார். மீண்டும் அதே போன்ற தகாத வார்த்தைகளை கூறி பெரியாரை கடுமையாக விமர்சித்தார். பொதுமக்கள் பார்க்கும் நேரலை நிகழ்வில் சீமான் தகாத வார்த்தைகளில் பேசியிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ”ரூ.15 லட்சம் கேட்டது உண்மையா”..? ”தைரியமா சொல்லுங்க”..!! புதிய மாவட்ட செயலாளர்களிடம் விஜய் ரகசிய விசாரணை..!!

Tags :
Advertisement