For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”ரூ.15 லட்சம் கேட்டது உண்மையா”..? ”தைரியமா சொல்லுங்க”..!! புதிய மாவட்ட செயலாளர்களிடம் விஜய் ரகசிய விசாரணை..!!

It has been reported that leader Vijay will meet and speak to the new district secretaries of the Tamil Nadu Victory Party separately.
01:18 PM Jan 24, 2025 IST | Chella
”ரூ 15 லட்சம் கேட்டது உண்மையா”    ”தைரியமா சொல்லுங்க”     புதிய மாவட்ட செயலாளர்களிடம் விஜய் ரகசிய விசாரணை
Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய மாவட்ட செயலாளர்களை தலைவர் விஜய் தனித்தனியாக சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

விஜய் கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதேபோல், விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இதில், கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் குறித்து விஜய் அறிவித்தார். இது அப்போது, அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியிருந்தது. இதற்கிடையே, தவெக-வில் நிர்வாகிகள் நியமனமும் ஒருபக்கம் நடந்து வருகிறது.

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்டம் தோறும் புதிய அலுவலகங்களை திறந்து வைத்து, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சமீபத்தில் கூட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக பனையூர் கட்சி அலுவலகத்தில் மீட்டிங் நடந்தது. சட்டமன்றத் தேர்தல் 2026இல் நடக்கவுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் முடிவு செய்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயலாளர்களை நியமிக்கும் பணி தீவிரமாக நடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக, தவெக-வில் பதவி பெற ரூ.15 லட்சம் வசூலிக்கப்படுவதாக வாட்ஸ் அப்பில் தகவல் வெளியானது. இதையடுத்து, பதவிக்கு பணம் பெறும் நிர்வாகிகள் மீது எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் தான், தவெக மாவட்ட செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று சந்தித்து பேசவுள்ளார். முதற்கட்டமாக சென்னை, செங்கல்பட்டு, அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல் மாவட்ட செயலாளர்களை இன்று தனித்தனியாக சந்திக்கிறார். அவர்களின் பதவி பெற பணம் கேட்கப்பட்டதா..? என விசாரிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று மாலை மாவட்ட செயலாளர்களின் விவரங்களை தவெக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி எஃப்-15..!! நேரில் பார்க்க வேண்டுமா..? எப்படி விண்ணப்பிப்பது..? தேதி, நேரம் என்ன..?

Tags :
Advertisement