ரெடி...! 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தேதி அறிவிப்பு...! 5 நாள் விடுமுறை...
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 5 நாள்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு அட்டவணையானது நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்ளுக்கு செப்டம்பர் 20 முதல் 27 வரை காலாண்டு தேர்வு நடத்தப்பட உள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ; 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரையும், 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளுக்கு 19ம் தேதி முதல் 27ம் தேதி வரையும், காலாண்டுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணைப்படி 6ம் வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், 7ம் வகுப்புக்கு மதியம் 1.15முதல் 3.15 மணி வரையும், 8ம் வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் 12 மணி வரையும், 9ம் வகுப்புக்கு மதியம் 1.15 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வுகள் நடத்தப்படும்.
மேலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 1.15 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், 12-ம் வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12.45 மணி வரையும் தேர்வுகள் நடக்கும். கேள்வித்தாள் படித்துப் பார்த்தல், விடைக்குறிப்பேட்டில் விவரங்கள் குறிக்கவும் 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.