For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மருத்துவ மாணவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் குறைப்பு..!! அரசு மருத்துவமனைகளில் நிரந்த பணி..? வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

An announcement has been made that the mandatory contract period for postgraduate medical students has been reduced from two years to one year.
10:33 AM Nov 21, 2024 IST | Chella
மருத்துவ மாணவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் குறைப்பு     அரசு மருத்துவமனைகளில் நிரந்த பணி    வெளியான சூப்பர் அறிவிப்பு
Advertisement

மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் இரண்டு ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு மருத்துவமனைகளில், அரசு சாரா மருத்துவர்களாக பணிபுரியும் மருத்துவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு மருத்துவ மாணவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர்.

Advertisement

எம்டி/எம்எஸ் உள்ளிட்ட மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாக கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பது விதியாக இருந்து வந்தது. இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவ பணிகள் இயக்குனர் உள்ளிட்ட மருத்துவத்துறையின் உயர் அதிகாரிகளுடன் அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு சாரா மருத்துவர்கள் சங்கம் ஆலோசனை நடத்தியது.

இந்த ஆலோசனைக்குப் பின், 2 ஆண்டுகளாக இருந்த அரசு சாரா ஒப்பந்த பணியை ஓராண்டாக குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிப்பை வரவேற்பதாக மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஆண்டுக்கு 700 முதுநிலை பட்டதாரி மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் அரசு சாரா பணியில் சேருகின்றனர். ஒப்பந்த பணிக்காலத்தை குறைத்ததன் மூலம் தமிழக மருத்துவர்களுக்கு அதிக பயன் கிடைக்கும்.

பயிற்சி முடித்தவுடன் தனியார் மருத்துவமனையில் பலர் சேர்ந்துவிடுகின்றனர். இதனால் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை போக்க விருப்பப்படும் முதுநிலை மருத்துவர்களை பணியில் தொடர வைக்க வேண்டும். இதன் மூலம் அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள் குறையும். இதனால், அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கான முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள எளிமையாக இருக்கும். இதனால், நிரந்தர வேலைவாய்ப்பையும் செய்து தர வேண்டும் என மருத்துவ மாணவர்கள் சங்கம் கோரிக்கையும் வைத்துள்ளனர்.

Read More : அடேங்கப்பா..!! இன்டர்நெட், சார்ஜிங் செய்ய தேவையில்லை..!! எலான் மஸ்க் தயாரிக்கும் புதிய செல்போன்..!!

Tags :
Advertisement