முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

8 இந்திய வீரர்களை விடுதலை செய்தது கத்தார் அரசு!… 7 பேர் தாயகம் திரும்பினர்!… வெளியுறவுத்துறை!

06:58 AM Feb 12, 2024 IST | 1newsnationuser3
Advertisement

உளவு பார்த்ததாக கத்தார் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது. அவர்களில் 7 பேர் இந்தியா வந்தடைந்துள்ளனர் என்று வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

Advertisement

இந்தியாவைச் சேர்ந்த முன்னாள கடற்படை வீரர்கள் 8 பேர், நீர்மூழ்கி கப்பல் திட்டத்தை உளவு பார்த்ததாக கத்தார் அரசு குற்றஞ்சாட்டி கடந்த 2022 அக்டோபரில் கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் அவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து அவர்களின் தண்டனையை குறைக்க இந்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனால் அவர்களின் தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டு சிறை தண்டனையாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த 8 முன்னாள் அதிகாரிகளையும் கத்தார் அரசு விடுதலை செய்துள்ளது. அவர்களில் ஏழு பேர் இந்தியா வந்தடைந்துள்ளனர் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Tags :
7 பேர் தாயகம் திரும்பினர்8 இந்திய வீரர்களை விடுதலைகத்தார் அரசுவெளியுறவுத்துறை
Advertisement
Next Article