திடீரென இடிந்து விழுந்த பிரமிடுகள்..!! மிகப்பெரிய இயற்கை பேரழிவு வரப்போகுது..!! எச்சரிக்கும் கிராம மக்கள்..!!
பொதுவாகப் பிரமிடுகள் என்றாலே நம் நினைவுக்கு வருவது எகிப்து தான். அங்கே உள்ள மிகப் பெரிய பிரமிடுகளை பார்த்தாலே வியப்பாக இருக்கும். ஆனால், எகிப்தைத் தாண்டியும் வேறு சில நாடுகளிலும் பிரமிடுகள் உள்ளன. அந்த வகையில், லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவிலும் சில பிரமிடுகள் உள்ளன. அங்குள்ள இரண்டு பிரமிடுகளில் ஒன்று திடீரென இடிந்துள்ளன. இது, விரைவில் நடக்கப் போகும் அழிவைக் குறிக்கும் வகையில் இருப்பதாகவும், இதை இயற்கைக்கு அப்பாற்பட்ட அறிகுறி என்றும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
அங்கே சமீபத்தில் மிகப் பெரிய புயல் ஏற்பட்டது. அதில் தான் இந்த இரட்டை பிரமிடுகளில் ஒன்று இடிந்து விழுந்தது. மிகப் பெரிய இயற்கை பேரழிவு ஏற்படுவதற்கான அறிகுறிதான் இது என அந்த பழங்குடி மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஜூலை 30ஆம் தேதி பெய்த கனமழையால் பிரமிட்டின் ஒரு பகுதி இடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அங்கிருந்த அஸ்டெக் இன மக்களை வீழ்த்திய புரேபெச்சா பழங்குடியினரால் இந்த பிரமிடுகள் கட்டப்பட்டன. பண்டைய புரேபெச்சா பழங்குடியினர் வழிபடும் குரிக்வேரிக்கு நரபலி தர இதனை பயன்படுத்தியுள்ளனர். யக்காத பிரமிடுகள் என்று அழைக்கப்படும் இவை மைக்கோகன் மாகாணத்தில் காணப்படுகிறது. இந்த பிரமிடுகள் இப்போது தேசமடைந்துள்ள நிலையில், இவை அடுத்து ஏற்படப் போகும் இயற்கை பேரழிவையே குறிப்பதாகப் பழங்குடியினர் எச்சரிக்கின்றனர்.
Read More : Reserve Bank of India-வில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க இன்றே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!