For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நடுக்கடலில் ரூ.3000 கோடி போதைபொருள் பறிமுதல்!. இந்தியா-இலங்கை கடற்படை அதிரடி!

Indian and Sri Lankan navies seize 500 kg Crystal Meth in Arabian Sea
05:50 AM Nov 30, 2024 IST | Kokila
நடுக்கடலில் ரூ 3000 கோடி போதைபொருள் பறிமுதல்   இந்தியா இலங்கை கடற்படை அதிரடி
Advertisement

Drug seized: வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட இருந்த ரூ.3000 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை நடுக்கடலில் இடைமறித்து இந்தியா - இலங்கை கடற்படையின் கூட்டு நடவடிக்கையால் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

அரபிக்கடலில் இலங்கை நாட்டு கொடியுடன் கூடிய மீன்பிடி படகுகளில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படை அதிகாரிகள் இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் இந்திய கடற்படை துரிதமாக மேற்கொண்ட நடவடிக்கையில் அந்தப் படகுகள் தடுக்கப்பட்டது. கடந்த 25ம் தேதி இந்திய கடற்படை மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் போதை கடத்தலில் ஈடுபட்ட கடத்தல்காரர்கள் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குருகிராமில் உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிக்கான தகவல் மையத்திலிருந்து பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில், இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் மூலம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தேடுதல் நடவடிக்கைகளில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலும் ஈடுபடுத்தப்பட்டது. இந்த தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கை கடற்படையால் தொடர்ந்து வழங்கப்பட்ட தகவலின் பேரில் ரோந்து விமானம் மூலம் இரண்டு படகுகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு அவை இடைமறிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையில் 500 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. கடத்தி வந்த போதை பொருளின் மதிப்பு ரூ.3000 கோடி என்று கூறப்படுகிறது. இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை இரு நாடுகளின் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் கடற்படையின் கூட்டு செயல்பாடுகளை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

Readmore: கிட்னியில் உள்ள கல்லை உடனே வெளியேற்ற உதவும் பானம்..!! நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்..!!

Tags :
Advertisement