ஒரே போடு..!! கதிகலங்கிய மோடி..!! பாஜகவின் குடுமி இருவர் கையில்..!! என்னதான் நடக்கிறது NDA கூட்டணியில்..?
2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக பெரிய துறைகளை நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவிற்கு கொடுக்க மறுத்து வருகிறதாம்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை. இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை. இவர்களின் ஆதரவு இருந்தால்தான் பாஜக ஆட்சி அமைக்க முடியும். இனி இவர்கள் சொல்வதுதான் சட்டம் என்ற நிலைமை பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் நிதிஷ் மற்றும் நாயுடு பாஜகவிடம் சில கோரிக்கைகளை வைத்துள்ளார்களாம். அதில் உள்துறை மற்றும் பாதுகாப்பு துறையை நாயுடு கேட்டுள்ளார். அதோடு துணை பிரதமர் பதவி வேண்டும். ரயில்வே அல்லது சாலை போக்குவரத்து துறையில் ஒன்று வேண்டும் என்று கேட்க எல்ஜே பி பாஸ்வான் ஆலோசனை செய்துள்ளாராம். இதுபோக நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் துணை பிரதமர் + நிதி துறையை வேண்டும் என்று கேட்க முடிவு செய்துள்ளதாம். 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், பாஜக பெரிய துறைகளை நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு கொடுக்க மறுத்து வருகிறதாம்.
பெரிய துறைகளை நாங்களே வைத்துக்கொள்வோம். அதை உங்களுக்கு கொடுத்தால் ஆட்சியை சுமூகமாக செய்ய முடியாது. திட்டங்களை நிறைவேற்ற முடியாது என்று பாஜக பிடிவாதம் பிடிப்பதால் மோதல் ஏற்பட்டுள்ளதாம். என்ன நடந்தாலும் பாஜகவுக்கு இனி வெற்றிகரமான நாட்கள் இல்லை. அதனால்தான் மோடியும் நேற்று முகம் வாடி இருந்தார். இதை உணர்ந்தே பாஜகவும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் உடைந்து போய் இருக்கிறது.
Read More : அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி..!! தமிழக பாஜக தலைவராகிறார் வானதி சீனிவாசன்..? வெளியான பரபரப்பு தகவல்..!!