முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பொக்கிஷ அறை.. அதிசயங்கள் நிறைந்த பூரி ஜெகந்நாதர் கோயில்..!! இப்படி ஒரு வரலாறு இருக்கா?

Puri Jagannath Temple is one of the Vaishnava temples located on the coast of Puri in the state of Odisha.
06:00 AM Dec 03, 2024 IST | Mari Thangam
Advertisement

ஒடிசா மாநிலத்தில் பூரி கடற்கரையில் அமைந்திருக்கும் வைணவ கோவில்களில் ஒன்றுதான் பூரி ஜெகன்னாதர் ஆலயம். இக்கோயிலின் தனிச்சிறப்புகள் என்ன என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்?

Advertisement

கோயில் அமைப்பு : பொதுவாக கோயில்களில் கடவுளின் சிலைகள் கற்களால் செய்யப்பட்டு பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வழிபட்டு வருகிறோம். ஆனால் இக்கோயிலில் மட்டுமே மரத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலை இருந்து வருகிறது. மேலும் இந்த சிலை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை  புதுப்பிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறது. இக்கோயிலின் கருவறையில் கிருஷ்ணர், பலராமர், சுபத்திரை என மூன்று கடவுள்களும் ஒரே இடத்தில் இருந்து காட்சியளிக்கின்றனர் என்பது சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.

இக்கோயிலின் தனி சிறப்பாக கருதப்பட்டு வருவது, நகரின் எந்த பகுதியில் இருந்து இக்கோயிலை பார்த்தாலும் கோயிலின் கோபுரம் நம்மை பார்த்துக் கொண்டே இருப்பது போல தெரியும். இதனால் அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் கடவுள் நம்மளை கண்காணித்துக் கொண்டே இருப்பார் என்று பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது.

மேலும், பூரி ஜெகநாதர் கோயிலின் கோபுரத்தில் ஒரு கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இது சாதாரண கொடியல்ல. காற்று எந்த திசையில் வீசுகிறதோ அதற்கு எதிர்ப்பக்கமாக இந்த கொடி பறக்கும். எவ்வளவு வெயில் அடித்தாலும் இக்கோயிலின் கோபுரத்தின் நிழல் கீழே விழுவது இல்லை. மேலும் இந்த கோயிலில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் அளவு எப்போதும் கூடுவதோ, குறைவதோ இல்லை. ஆனால் பக்தர்கள் கூடினாலும், குறைந்தாலும் பிரசாதம் மிஞ்சுவதுமில்லை. பக்தர்களுக்கு கிடைக்காமல் போவதுமில்லை. இது இக்கோயிலின் அதிசயமாக இருந்து வருகிறது. இவ்வாறு பல்வேறு அதிசயங்களை கொண்ட இந்த கோயிலை பார்ப்பதற்காகவே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

பொக்கிஷ அறை : ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜகந்நாதர் ஆலயம், 12வது நூற்றாண்டைச் சேர்ந்தது. மிகவும் பழைமையும் பெருமையும் வாய்ந்த இந்த கோயிலில் ரத்னா பந்தர் எனப்படும் கோயில் தங்க ஆபரணங்கள் இருக்கும் அறை கடந்த 46 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு மன்னர்களால் வெள்ளி, தங்கம், வைரம், வைடூரியம் என்று ஏராளமான விலைமதிப்பற்ற செல்வங்களை கோயிலுக்குக் காணிக்கையாக வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நகைகளெல்லாம் பொக்கிஷ அறையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பொக்கிஷ அறை 1978ல் கடைசியாகத் திறக்கப்பட்டது. இந்தப் பொக்கிஷ அறை தரைக்கு கீழே கடலை ஒட்டியிருக்கும் பகுதியாகும். அதிக வருடங்களாக திறக்காமல் இருந்ததால், அதன் நிலைமையை ஆராய 1984ல் தொல்லியல் துறை குழு ஒன்று உள்ளே சென்றது. ஆனால், பொக்கிஷ அறையின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததாகவும், பாம்புகள் சீறியதாகவும் கூறி அந்தக் குழு திரும்பி வந்துவிட்டது. அதன் பிறகு 2018ம் ஆண்டு பொக்கிஷ அறையின் சாவி காணாமல் போய்விட்டதாகவும், அந்த சாவி தமிழ்நாட்டில்தான் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. 46 வருடத்திற்குப் பிறகு இப்போது கடந்த 14.7.2024ல் அந்தப் பொக்கிஷ அறை திறக்கப்பட்டிருக்கிறது.

Read more ; செல்போன் சார்ஜரிலிருந்து மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு.!!

Tags :
odishaPuri Jagannath TempleVaishnava temples
Advertisement
Next Article