For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பூரி ஜெகநாதர் ரத யாத்திரை: கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி!. 15 பேர் காயம்!. ரூ. 4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

Jagannath Rath Yatra 2024: One dead, 15 injured in stampede, CM Majhi announces Rs 4 lakh ex gratia
05:55 AM Jul 08, 2024 IST | Kokila
பூரி ஜெகநாதர் ரத யாத்திரை  கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி   15 பேர் காயம்   ரூ  4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
Advertisement

Puri Jagannath Ratha Yatra: ஒடிசா புரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Advertisement

பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கும் புதிய தேர் செய்யப்பட்டு, அந்த தேர்களில் மூலவர் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். இந்தக் கோயிலில் மூலவர்களாக பாலபத்திரர் அவரின் சகோதரர் ஜெகந்நாதர் சகோதரி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உள்ளது.

ஜெகநாதருக்கு 45 அடி உயர தேரும், பாலபத்திரருக்கு 44 அடி உயர தேரும், சுபத்ராவுக்கு 43 அடி உயர தேரும் உருவாக்கப்பட்டுள்ளது. ரத யாத்திரைக்காக ஜூலை 7, 8 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. ரதங்கள் ஜெகநாதர் கோயிலின் சிம்ம வாசல் முன் நிறுத்தப்பட்டு, பூரி ஜெகன்நாதரின் தோட்ட வீடு என்றும் அழைக்கப்படும் குண்டிச்சா கோயிலுக்கு கொண்டு செல்ல தயாராக உள்ளன.

ஒடிசாவில் மோகன் சரண் மாஜி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை நேற்று (ஜூலை 7) தொடங்கியது. ஒடிசா புரி ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். அவருடன் மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் இந்த ரத யாத்திரையில் பங்குபெற்ற பக்தர் ஒருவர் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும் பலர் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் பக்தர்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக அவர்கள் மீது தண்ணீர் தெளிக்கப்பட்ட போதிலும், பலர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அங்கு இருந்த ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கிடையில், ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.

Readmore: Govt Job | No Exam.. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை!! 688 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!!

Tags :
Advertisement