For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

6 முதல் 8 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு முடிவுகள் வெளியீடு...! எங்கு சென்று பார்ப்பது...?

Publication of quarterly examination for 6th to 8th students
06:34 AM Oct 08, 2024 IST | Vignesh
6 முதல் 8 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு முடிவுகள் வெளியீடு     எங்கு சென்று பார்ப்பது
Advertisement

பள்ளிக்கல்வி / தொடக்கக் கல்வி 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறி காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களை EMIS தளத்தில் உள்ளிடுதல் வழிகாட்டி நெறிமுறைகள் - சார்ந்து பள்ளிக்கல்வி & தொடக்கக் கல்வி இயக்குநர்களின் செயல்முறைகள்.

Advertisement

2024 - 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதல் பருவ தொகுத்தறி காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களை EMIS தளத்தில் உள்ளிட வேண்டும். விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி / காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களை (100 மதிப்பெண்கள்) பாட வாரியாக அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் உள்ளிடுமாறு EMIS அறிவுறுத்தப்படுகிறது. தளத்தில் உள்ளிடுமாறு இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இது சார்ந்த விவரத்தினை தெரிவிக்குமாறும், ஆசிரியர்கள் தெளிவுற அறிந்திருப்பதையும் உறுதி செய்யவேண்டும்.

அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இது சார்ந்த விவரத்தினை தெரிவிக்குமாறும், ஆசிரியர்கள் தெளிவுற அறிந்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இதை அனைத்தும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி ) அறிவுறுத்தப்படுகிறது.

Tags :
Advertisement